TamilSaaga

பிரபல நடிகை ஆல்யா மானஸா 2வது முறையாக கர்ப்பம்.. பணப் பிரச்சனையால் சொகுசு காரை விற்றாரா கணவர் சஞ்சீவ்?

அண்டை நாடான இந்தியாவில் உள்ள நமது தமிழ்நாட்டை பொறுத்தவரை வெள்ளித்திரை நடிகர் நடிகைகளுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு உள்ளதோ அதே அளவிற்கான ரசிகர்கள் கூட்டம் சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கும் உண்டு. சின்னத்திரையில் பலரை கவர்ந்த சந்தானம், சிவகார்த்திகேயன், ரோபோ ஷங்கர் போன்ற எண்ணற்ற நட்சத்திரங்கள் இன்று வெள்ளித்திரையில் மின்னுவதே அதற்கு சாட்சி. இந்நிலையில் சின்னத்திரையில் ஜோடிபோட்டு கலக்கும் ஒரு தம்பதி உள்ளது என்றால் அது நம்ம ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடிதான்.

இரண்டாக பிளந்த தலையோடு வந்த உடல்.. தாங்கமுடியாத நாற்றம் : சிங்கப்பூரில் “Embalming ராணிகளாக” வலம்வரும் இரு பெண்கள் – இது சகிப்புத் தன்மையின் உச்சம்

சஞ்சீவ் மற்றும் ஆல்யாவிற்கு நடந்தது காதல் திருமணம் தான், பெற்றோரின் எதிர்ப்பை தாண்டி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அந்த அழகிய காதலுக்கு சாட்சியாக இவர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அய்லா சையத் என்ற அந்த பெண் குழந்தை பிறந்தபோது சஞ்சீவ் தனது மனைவிக்கு ஒரு சொகு கார் பரிசளித்தது அனைவரும் அறிந்ததே. சிறிது காலம் சின்னத்திரைக்கு லீவு கொடுத்திருந்த மானசா அதன் பிறகு மீண்டும் ராஜா ராணி 2 என்ற நாடகத்தில் நடித்து வந்தார்.

View this post on Instagram

A post shared by sanjeev (@sanjeev_karthick)

“>சகோதரருக்கு கார் பரிசளித்த சஞ்சீவ்

இந்நிலையில் மீண்டும் நிறைமாத நிலவாக மாறியுள்ள மானசா ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலகியுள்ளார். விரைவில் மீண்டும் தாயாகவுள்ள மானசா மற்றும் அவரது கணவர் சஞ்சீவ் பணப்பிரச்னையால் தனது சொகு காரை விற்றுள்ளார் என்று புரளிகள் கிளம்பியது. ஆனால் அந்த Mercedes C ரக காரை அவர் தனது சகோதரருக்கு பரிசளித்துள்ளதை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சிங்கப்பூர்… “பேருந்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் கோபுரம்” – தமிழர்களின் பெருமையை என்றுமே மறைக்காத நமது சிங்கை

ஆல்யா மற்றும் சஞ்சீவ் ஜோடியிடம் சில சொகு கார்கள் ஏற்கனவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சீரியல்களிலும் மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடிக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே என்று கூறுவார்கள். ஆனால் புகழின் உச்சத்திற்கு சென்றும் இருவரும் சகஜமாக இருப்பது வரவேற்கத்தக்க விஷயம் தான்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts