TamilSaaga

“சிங்கப்பூரில் உயிரிழந்த குமரவேல் ராஜா” : சொந்த ஊர் கொண்டுவரப்பட்ட உடல் – உதவிய துரை வைகோ

சில வாரங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்த குமரவேல் ராஜா என்பவர் அவர் பணி செய்து வந்த நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில் இறந்த சம்பவம் நமது நெஞ்சத்தை உலுக்குவதாக இருந்தது. கடந்த நவம்பர் 3ம் தேதி இறந்த அவரது உடல் நவம்பர் 6ம் தேதி திருச்சி விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் திரு. வைகோ அவர்களுடைய மகன் திரு. துறை வைகோ அவர்களுடைய முயற்சியால் தான் அவரது உடல் சிங்கப்பூரில் இருந்து தமிழகம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : “விபத்தில் இறந்த தொழிலாளி ஆனந்தன்” : உடலை சொந்த ஊர் கொண்டுவர முடியாமல் தவிக்கும் மனைவி

இதுகுறித்து திரு. துறை வைகோ வெளியிட்ட முகநூல் பதிவில் “திருப்பத்தூர் மாவட்டம், உமையப்பநாயக்கனூரை சார்ந்த குமரவேல் ராஜா சிங்கப்பூரில் கட்டுமான நிறுவனத்திற்கு வேலைக்கு சென்ற இடத்தில் 03.11 .2021 அன்று இறந்துவிட்டார், அவரது உடலை இந்திய கொண்டுவர நவம்பர் 4ம் தேதி விடுமுறை என்பதால் 6ம் தேதி அன்று காலை 6 மணிக்கு திருச்சி விமான நிலையம் கொண்டுவரப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.”

“இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றிய செயலாளர் திரு. கல்யாணசுந்தரம் அவர்கள் 04.11.2021 அன்று காலை 8 மணிக்கு தொலைபேசியில் என்னை அழைத்து வாணியம்பாடி தாலுக்கா, உமையப்பநாயக்கனூரை சார்ந்த திமுக கவுன்சிலர் சிகாமணி என்பவர் அவரின் கிராமத்தைச் சேர்ந்த ராஜா அப்புக்கவுண்டரின் மகன் குமரவேல் ராஜா என்பவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்திற்கு வேலைக்கு சென்ற இடத்தில் 03.11 .2021 அன்று மதியம் 2 மணியளவில் மயங்கி விழுந்த நிலையில், அங்கிருந்து மருத்துவமணைக்கு கொண்டு சென்ற போது இறந்து விட்டதாவும்”.

“அவரது உடலை எப்படி இந்தியாவிற்கு கொண்டு வருவது என்று புரியாமல் அவரின் உதவி நாடிய நிலையில், இந்த தகவலை திரு. கல்யாணசுந்தரம் தொலைபேசியில் சொன்னவுடன், சிங்கப்பூரில் உள்ள எனது நண்பர் யாஸீன் அவர்கள் மூலம் அனைத்து மருத்துவமணை விதிகளுக்கு உட்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் முடித்து, இறந்துபோன குமரவேல் ராஜா அவர்களை உடலை,06 ம் தேதி காலை 6 மணிக்கு திருச்சி விமானத்தில் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு குமரவேல் ராஜாவின் சொந்த ஊரில் உள்ள அவரின் பெற்றோரிடம் ஆம்புலன்ஸ் மூலம் அவரின் உடலை கொண்டு சென்று ஒப்படைக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.

வீட்டிற்காக சொந்த மண்ணை விட்டு வெளிநாட்டில் வேலைசெய்து வரும் தொழிலாளர்களுக்கு அவர்களின் இறப்பு கூட ஒரு கொடூரமான நிகழ்வாக இருக்கின்றது. தனிமையில் மனிதன் வாழ்வதே சிரமம் என்றபோது சொந்த மண்ணை விட்டு பல்லாயிரம் மையிலுக்கு அப்பால் சென்று இறப்பது என்பது தான் அவலத்தில் உச்சம். ஆனால் இந்த இக்கட்டு சூழலில் உதவும் நபர்களை நாம் நிச்சயம் மனதார பாராட்டாமல் இருக்கமுடியாது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts