TamilSaaga

அரசு ஏற்றுமதியில் மேலும் பல கட்டுப்பாடுகளை விதித்த இந்தியா…. வரும் நாட்களில் மேலும் அரிசி விலை உயர வாய்ப்பு!

அரிசி ஏற்றுமதியை மேலும் இந்தியா கட்டுப்படுத்தியுள்ளதால், உலகெங்கிலும் அரிசி விலை மேலும் உயரும் என கருதப்படுகிறது. ஒரு டன் பாசுமதி அரிசியின் விலை குறைந்தபட்சம் 1200 டாலர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாஸ்மதி அல்லாத பொன்னி அரிசி வகைகளை பாசுமதி என்ற பெயரில் ஏஜென்ட்கள் வெளிநாடுகளுக்கு கடத்துவதை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாசுமதி என்ற பெயரிட்ட சாதாரண பொன்னி அரிசி மூட்டைகள் டன்னுக்கு 360 டாலருக்கும் குறைவான மதிப்பில் ஏற்றுமதி செய்யப்படுவதே அதிகாரிகள் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தனர். இதற்கு முன்பு ஆகஸ்ட் 25ஆம் தேதி புழுங்கல் அரிசிக்கான ஏற்றுமதி வரியை 20 சதவீதம் அதிகரிப்பதாக இந்திய அறிவித்தது. இந்த வரி விகிதமானது அக்டோபர் மாதம் வரை கடைபிடிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

ஜூலை மாதம் பாஸ்மதி அல்லாத பிற பொன்னிவகை அரிசிகளை ஏற்றுமதி செய்வதை தடை விதிப்பதாக இந்தியா உடனடியாக அறிவித்ததை அடுத்து உலகெங்கிலும், அரிசி விலையானது தாறுமாறாக உயர்ந்தது. உள்ளூரில் அரிசி கடத்தலை தவிர்ப்பதற்காக அரசு எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் ஏராளமான நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அரிசி விலையானது மேலும் உயரும் என கருதப்படுகின்றது. எனவே சிங்கப்பூரில் வாழும் தமிழ் மக்கள் இதனை கருத்தில் கொண்டு தேவையான அரிசியினை முன்கூட்டியே வாங்கி வைப்பது சிரமத்தை தவிர்க்கும்.

Related posts