TamilSaaga

சிங்கப்பூரில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களே.. ஏமாறாமல் இருக்க Scamshield App அவசியம் – ஏன்? – முழு விவரம்

சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக சிங்கப்பூர் காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட ஒரு புதிய முயற்சியாக இந்த ஸ்காம்ஷில்ட் செயலி பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்திருந்தால், அவர்கள், சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களிடமிருந்து வரும் அழைப்புகளில் இருந்து தங்களை காத்துக் கொள்ளலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்துடன் மோதல் ஏற்பட்டால் இழப்பின்றி மீள்வது எப்படி? அதன் சாதக, பாதகம் என்ன? – Complete Report

ஸ்காம்ஷீல்ட் செயலியை பதிவிறக்கம் செய்வது எப்படி?

எஸ்எம்எஸ் வழியாக வரும் வரும் மோசடி செய்திகள் மற்றும் அழைப்புகள் வழியாக வரும் மோசடி அழைப்புகளை தடுக்கவும், அனைவருக்கும் புரிந்து கொள்ளும் வகையில் சில எளிய முறைகளில், இந்த செயலியை பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை  https://www.scamshield.org.sg  என்ற இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Scamshield ஆப்பை எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும் என https://www.scamshield.org.sg/setup-guide/ இந்த இணையப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Call blocking-யை enable செய்வது எப்படி?

  • Scamshield ஆப் எனும்ஒரு சிறப்பான சேவை தற்பொழுது, iOS சாதனங்களில் மட்டுமே கிடைக்கிறது.
  • கூகுளில் Scamshield ஆப்-பை பதிவிறக்கம் செய்யவும். பின்பு Call blocking-யை Enable செய்ய வேண்டும்  
  • முதலில் போனின் Settings மெனுவை க்ளிக் செய்யவும். அதில் Phone என்ற ஆப்சனை செலக்ட் செய்யவும்.
  • அடுத்துCall blocking & Identification-யை தேர்வு செய்யவும், பின்பு Scamshield யை செலக்ட் செய்யவும்.

Message Filtering செய்வது எப்படி?

  • Message என்ற ஆப்சனை செலக்ட் செய்யவும்.
  • அடுத்து Message Filtering ஆப்சனில் Unknown & Spam –யை தேர்வு செய்யவும்.
  • Sms Filtering ஆப்சனில் Scamshield ஆப்சனை செலக்ட் செய்யவும்.
  • இனி நீங்கள் மோசடி செய்திகளை கண்டால், Scamshield ஆப்-பை பயன்படுத்தி புகாரளிக்கலாம்.

Scamshieldன் பயன்கள் என்ன?

இந்த செயலியின் மூலம் பொதுமக்களுக்கு வரும் அழைப்பானது, காவல்துறையினரால் பராமரிக்கப்பட்டு வரும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர்களுடைய விவரங்களுடன் ஒப்பிடப்படுகிறது.

பின்னர், அந்த எண் சட்டவிரோத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதா,  இல்லையா என்பதை இந்த செயலி தீர்மானிக்கிறது.  ஒருவேளை சட்டவிரோதக் நடவடிக்கைகளுக்கு அந்த எண்ணை பயன்படுத்தியிருந்தால் உடனே அந்த எண்ணை இந்த செயலி தடைசெய்கிறது.

நீங்கள் தெரியாத தொடர்பிலிருந்து எஸ்எம்எஸ் பெறும்போது, ​​உங்கள் தொலை தொடர்பு சாதனத்தில் உள்ள அல்காரிதத்தைப் பயன்படுத்தி, எஸ்எம்எஸ் மோசடியா என்பதை ஸ்காம்ஷில்ட் தீர்மானிக்கும்.

மேலும் தேவையற்ற எஸ்எம்எஸ் செய்திகளை,  குப்பை எஸ்எம்எஸ் என்ற போல்டரில் அதாவது கோப்புறையில் கொண்டு சேர்த்துவிடுவதோடு மட்டுமல்லாமல், மோசடி SMSகள் NCPC மற்றும் SPF க்கு இணைத்து அனுப்பப்படும்.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூர் கிராஞ்சியில் காண்போரை ஆச்சர்யப்படுத்தும் Cai Shen சிலை – இரண்டாவது மாடியில் ஏற்றியது எப்படி?

புதுப்புது எண்களை பயன்படுத்தி வரும் அழைப்புகளையும் இந்த செயலி  கண்காணிப்பதால், இதுபோன்ற மோசடி அழைப்புகள் மற்றும் செய்திகளிலிருந்து பலரை பாதுகாக்க உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், WhatsApp, Wechat, IMO, Viber போன்ற பிற சாட் சேவைகளைப் பயன்படுத்தும்போது வரும் மோசடி செய்திகளையும் நீங்கள் இந்த செயலி மூலம் காவல்துறையினருக்கு புகார் அளிக்கலாம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts