TamilSaaga

உள்நாடோ, வெளிநாடோ.. ஓடி வந்து உதவுவதில் தமிழனுக்கு நிகர் தமிழனே! ஒரு சிறிய சம்பவத்தில் சிங்கப்பூர் நெஞ்சங்களை கவர்ந்த வெளிநாட்டு ஊழியர்

நமது சிங்கப்பூரின் வளர்ச்சியில் வெளிநாட்டு தொழிலாளர்களின் பங்கு என்பது எப்பொழுதுமே அதிகமாக உள்ளது என்பதை நம்மால் மறுக்க முடியாது. அந்தவகையில் சிங்கப்பூரில் பணிபுரியும் ஒரு வெளிநாட்டு தொழிலாளரும் ஒரு கார் ஓட்டுனரும் செய்த ஒரு சிறிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலானது மட்டுமல்லாமல் சிங்கப்பூர் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கடந்த புதன்கிழமை ஏப்ரல் 13ம் தேதியன்று பெர்சே உணவு மையத்திற்கு அருகிலுள்ள டெஸ்கர் சாலையில் நடந்த இந்த சம்பவத்தை டேனி என்பர் STOMPல் பகிர்ந்துள்ளார். வெளியான அந்த வீடியோவில், ஒரு முதியவரும் ஒரு பெண்ணும் ComfortDelGro டாக்ஸியில் இருந்து இறங்குவதைக் காணமுடிகிறது.

சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களுக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்த “பிரிட்ஜெட்” காலமானார் – வெளிநாட்டு தொழிலாளர்களின் ஒரே “தெய்வம்” இன்று மறைந்தது!

வண்டியில் இருந்து இறங்கிய அந்த இருவரும், அவர்கள் வாங்கிவந்த பொருட்களை காரிலேயே வைத்துவிட்டு செல்கின்றனர். இதை கண்ட டாக்ஸி ஓட்டுநர் அவர்களை அழைக்க வண்டியில் இருந்தவாறே அவர்களை நோக்கி கையசைத்தார்.

ஆனால் அவர்கள் திரும்பாத நிலையில், இந்த நிகழ்வை கண்ட அருகில் இருந்த ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளர் அவர்களை ஓடிச்சென்று அழைத்து வந்துள்ளார். சுதாரித்த அந்த பெண் அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு மீண்டும் பொருட்களை எடுத்துச்சென்றார்.

பரபரப்பான சிங்கப்பூர் Eunos சாலை.. Zebra Crossingல் சாலையை கடக்க முயன்ற முதியவர்.. கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி ஏறி உடல் நசுங்கி பலி – தவறு யார் மீது?

அந்த முதியவரும் திரும்பி வந்து தனது நன்றிகளை அவர்கள் இருவருக்கும் கூறிவிட்டு சென்றுள்ளார். உண்மையில் இதுபோன்ற ஊழியர்களின் செயல்கள் நம்மை நெகிழவைக்கின்றது என்று தான் கூறவேண்டும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts