TamilSaaga

சிங்கப்பூருக்கு வந்த புதிய MRT ரயில்கள் – கப்பலில் வந்திறங்கிய அழகு இருக்கே.. அட.. அட.. அட

SINGAPORE: ஒரு ஜோடி புதிய MRT ரயில்கள் சிங்கப்பூருக்கு வந்துள்ளன. வடக்கு-தெற்கு மற்றும் கிழக்கு-மேற்குப் பாதைகளில் (NSEWL) இயங்கும் 106 ரயில்களில் முதல் ரயிலாக இது மாற்றம் செய்யப்படுகிறது.

2021 ஆம் ஆண்டு பிரெஞ்சு ரயில் தயாரிப்பு நிறுவனமான Alstom கையகப்படுத்திய Bombardier Transportation வழங்கிய இரண்டு ஆறு பெட்டிகள் கொண்ட Movia மெட்ரோ ரயில்களைக் கொண்ட கப்பல் இன்று (பிப் 21) ஜூரோங் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது.

ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்டு, சீனாவின் சாங்சுனில் தயாரிக்கப்பட்டு, அசெம்பிள் செய்யப்பட்ட இந்த ரயில்கள், 2022-ஆம் ஆண்டின் இறுதியில் பயணிகள் ரயில் சேவையில் இணைக்கப்படுவதற்கு முன்பு, கடுமையான சோதனை பணிகளுக்கு உட்படுத்தப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க – “சிங்கப்பூரில் இருந்து 10 நிமிடம் Video Call பேச 15,000 ரூபாய்” – புதிய “ஆப்” தொடங்கி லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் நடிகை கிரண்

பச்சை மற்றும் சிவப்பு கோடுகளால் அலங்கரிக்கப்பட்ட புதிய ரயில்கள், ரயில் பயணத் தகவலைக் காண்பிக்கும் புதுப்பிக்கப்பட்ட எல்சிடி திரைகள், அத்துடன் pre-emptive பராமரிப்புக்கு உதவும் ஒருங்கிணைந்த கண்காணிப்பு வசதி கொண்டு பயணிகளுக்கு ஏற்ற சகல அம்சங்களுடன் ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று LTA மேலும் கூறியது.

2020 அக்டோபரில் பாம்பார்டியர் டிரான்ஸ்போர்ட்டேஷன் புதிய ரயில்களை அறிமுகப்படுத்தியபோது, அல்ஸ்டோம் நிறுவனத்தால் கையகப்படுத்தப்படுவதற்கு முன்பு, ரயிலில் சக்கர நாற்காலிகள் மற்றும் ஸ்ட்ரோலர்களுக்காக அதிக திறந்தவெளிகள் அமைக்கப்படும் என்று ரயில் நிறுவனம் கூறியது.

இந்த புதிய ரயில்கள் பராமரிப்பு செலவைக் குறைக்கும் மற்றும் ஆற்றல் செயல்திறனை அதிகரிக்கும், “உயர்ந்த சுற்றுச்சூழல் தரத்தை பூர்த்தி செய்யும்” என்றும் LTA கூறியுள்ளது. அதாவது, இந்த புதிய ரயிலால் அதிகம் தண்டச் செலவுகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போதைய போக்குவரத்து அமைச்சர் ஓங் யே குங் கூறுகையில், 2022 முதல் 2026 வரை 106 புதிய ரயில்கள் பயணிகள் சேவையில் இணையும் என்று கூறியிருந்தார். 1987 ஆம் ஆண்டில் இரண்டு MRT பாதைகள் திறக்கப்பட்டதிலிருந்து இங்கு இயக்கப்படும் முதல் தலைமுறை கவாசாகி ரயில்கள் உட்பட முதல் மூன்று தலைமுறை NSEWL ரயில்கள் படிப்படியாக நிறுத்தப்படும் என்றார்.

2018 ஆம் ஆண்டில் 106 புதிய ரயில்களில் 66 ஐ LTA வாங்கியது, இது முதல் தலைமுறை கவாசாகிகளுக்குப் பதிலாக $1.2 பில்லியன் ஒப்பந்தத்தில் நீண்ட கால சேவைக்கான ஆதரவையும் வழங்கியது.

இரண்டாம் தலைமுறை சீமென்ஸ் (Siemens ) மற்றும் மூன்றாம் தலைமுறை கவாசாகி-நிப்பான் ஷரியோ (Kawasaki-Nippon Sharyo)ரயில்களுக்குப் பதிலாக 2020ல் 337.8 மில்லியன் டாலர்களுக்கு மேலும் 40 ரயில்களை LTA வாங்கியது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts