TamilSaaga

சிங்கப்பூர் வரலாற்றிலேயே அதிக வெப்பமான நாள் எது தெரியுமா?

சிங்கப்பூர் வரலாற்றில் அக்டோபர் மாதத்தில் ஒரு நாள் வரலாற்றில் இதுவரை அதிக வெப்பமான நாளாக பதிவாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவில் அக்டோபர் மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அக்டோபர் 9ஆம் தேதி வெப்பநிலையானது 36.3 டிகிரி செல்சியஸ் என பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அது மட்டுமல்லாமல் நாட்டின் பல பகுதிகளிலும் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பொதுவாக சொல்லப்போனால் அக்டோபர் மாதம் முழுவதும் சிங்கப்பூரில் வெப்பமானது வாட்டி வதைக்கத்தான் செய்தது.மேலும் சில நாட்களில் வெப்பநிலையானது 34 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக இருந்தது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் ஒப்பிடும் பொழுது 2019 ஆம் ஆண்டில் அக்டோபர் 13ஆம் அதிக வெப்பமான நாளாக பதிவாகி இருந்தது.அதற்கு அடுத்தபடியாக இந்த வருடத்தின் அக்டோபர் மாதம் 35.7 டிகிரி செல்சியஸ் நாளாக பதிவாகியுள்ளது.

Related posts