TamilSaaga

சிங்கப்பூரில் எந்த துறைகளில் தற்போது வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது..? வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு இதோ tips!!

சிங்கப்பூரில் தற்போது புதிய வேலைவாய்ப்பு பெறுவது கடினமாகவும், நிச்சயமற்ற பொருளாதார சூழலும் நிலவுகிறது. ஆனாலும் சிங்கப்பூரில் பணிபுரியும் திறமை வாய்ந்த பணியாளர்கள், அதிக சம்பளம், நீண்ட கால பணி வாய்ப்புகள் மற்றும் சிறந்த வேலை- வாழ்க்கை சமநிலை ஆகியவற்றை எதிர்பார்த்து, தாங்கள் தற்போது செய்யும் வேலையை மாற்றிக் கொள்ளவே விரும்புவதாக சமீபத்திய LinkedIn ஆய்வு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 17 அன்று, தொழில்முறை நெட்வொர்க்கிங் தளமான LinkedIn வெளியிட்ட ஆய்வுத்தரவில் , வாக்களித்த 1,000 க்கும் மேற்பட்ட திறமை வாய்ந்த பணியாளர்களில், 86 சதவீதம் பேர் 2024 இல் ஒரு புதிய வேலையை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளனர். இது 2023 இல் இருந்ததை விட 15 சதவீதம் அதிகமாகும். இந்த ஆய்வானது , கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் 2023 இல், 18 முதல் 77 வயதுடையவர்களிடம் நடத்தப்பட்டது.

தற்போதைய சவாலான பொருளாதார சூழலிலும், அதிக சம்பளம் மற்றும் சிறந்த வேலை- வாழ்க்கை சமநிலை எதிர்பார்ப்பு ஆகியவையே பணியாளர்கள் தற்போதைய பணியிலிருந்து வெளியேற விரும்புவதற்கான முக்கிய காரணங்களாக LinkedIn தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஆய்வானது, அதிக திறன் வாய்ந்த பணியாளர்களின் மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் , அவர்கள் இனியும் பணிக்காக தங்களை அனுசரித்துக் கொள்வதற்கு பதிலாக, தங்களின் திறனை மேம்படுத்துவதன் மூலமாக தங்களுக்கேற்ற பணியைத் தாங்களே முடிவு செய்பவர்களாக மாறத் துவங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

புதிய வேலைகளைத் தேடுபவர்களின் மத்தியில் குறிப்பாக இந்த மாற்றமானது, 18 முதல் 26 வயதுக்குட்பட்ட Gen Z பணியாளர்கள் மற்றும் 27 முதல் 32 வயதுடைய millennials பணியாளர்களிடம் , அதிக சதவீதம் .உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், ஆய்வில் பங்கேற்ற சுமார் 70 சதவீத பணியாளர்கள், தாங்கள் தற்போது பணிபுரியும் துறையை விடுத்து, வேறு புதிய தொழில்துறை அல்லது வேறு புதிய வேலைப் பொறுப்பை ஏற்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இத்துடன் ‘வேகமாக வளர்ச்சி காணும் வேலைகள்’ என்ற பட்டியல் ஒன்றையும் LinkedIn தளம் வெளியிட்டுள்ளது. இப்பட்டியலின் 15 வேலைகளில் 8 வேலைகள் தொழில்நுட்பத் துறை தொடர்பானவை.

  1. Quantitative developer
  2. Sustainability consultant
  3. Security operations centre analyst
  4. Real estate agent
  5. Sales development representative
  6. Business development representative
  7. Infrastructure engineer
  8. Cyber-security engineer
  9. Site reliability engineer
  10. Back-end developer
  11. Cloud engineer
  12. Data science manager
  13. Search engine optimisation specialist
  14. Investment specialist
  15. Chief of staff

நீங்கள் பணிபுரியும் துறை இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளதா?? இல்லையெனில், இப்பொழுந்திருந்தே இத்துறைகளில் பணி புரிய முயற்சி மேற்கொள்வது நன்மை அளிக்கும்.

LinkedIn தளத்தை சிங்கப்பூரில் மூன்று மில்லியனுக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை உள்ளதை உள்ளபடி தெரிந்து கொள்ள தமிழ் சாகா ஃபேஸ்புக் பக்கத்தை நீங்க ஃபாலோ பண்ணலாம்.

Related posts