சிங்கப்பூரில் ஜூரோங் ஈஸ்ட் பகுதியில் உள்ள ஒரு நீச்சல் பள்ளி, சட்டவிரோதமாக குளோரின் பவுடரை பொது சாக்கடையில் வீசியதற்காக 6,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக PUB கடந்த திங்கள்கிழமை (டிசம்பர் 6) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மார்ச் 5ம் தேதி, Happy Fish நீச்சல் பள்ளியின் ஊழியர் ஒருவர் ஜூரோங் கேட்வே சாலையில் உள்ள அந்த நீச்சல் பள்ளியில் சுமார் 45 கிலோ கால்சியம் ஹைபோகுளோரைட்டை சாக்கடையில் வீசினார்.
இதையும் படியுங்கள் : “வழிகாட்டுதல் இன்றி வெளியில் சென்று வரலாம்”
மற்றும் சாக்கடையில் அந்த தண்ணீரை வெளியேற்ற Fire Hose-ஐ பயன்படுத்தினார் என்று PUB தெரிவித்துள்ளது. பெரும் வெடி சத்தம் கேட்டதாக அப்பகுதியில் உள்ள மக்கள் பீதியடைந்ததை அடுத்து, அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து எச்சரிக்கப்பட்டதாக தேசிய நீர் நிறுவனம் தெரிவித்துள்ளது. Happy Fish நீச்சல் பள்ளியின் நிறுவனர் டான் ஜியான் யோங், சம்பவம் நடந்த போது வளாகத்தில் மாணவர்கள் யாரும் இல்லை என்றும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் கூறினார்.
அந்த பள்ளியில் உள்ள குளோரின் டிரம்மில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதைக் கவனித்த பள்ளி நிர்வாகம், ஒரு கழிவு மேலாண்மை நிறுவனத்தை நியமித்ததாக நிறுவனர் கூறினார். ஆனால் அந்த பள்ளியில் இருந்த பராமரிப்புப் பராமரிப்பாளரான ஒரு ஊழியர் துர்நாற்றத்தை தவறாக புரிந்து கொண்டு குளோரின் பவுடரைக் கழிவுநீரில் வீசுவதற்கு முயற்சி செய்துள்ளார். மேலும் அது பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று அறியாமல் அவர் அவ்வாறு செய்ததாகவும், திரு டான் கூறினார்.
திங்களன்று வெளியிட்ட ஒரு பதிவில், கால்சியம் ஹைபோகுளோரைட் என்பது பொதுவாக குளத்தைச் சுத்தப்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது மிகவும் எதிர்வினை மற்றும் அரிக்கும் இரசாயனமாகும் என்று PUB விளக்கியது குறிப்பிடத்தக்கது.