TamilSaaga

“சிங்கப்பூரின் செராங்கூன் கார்டன் பப்” – பெருந்தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் மீறியதாக 15 பேரிடம் விசாரணை

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் செராங்கூன் கார்டன் வழியில் உள்ள ஒரு மதுக்கடையில் கூடி, அமலில் இல்ல பாதுகாப்பான தொலைதூர நடவடிக்கைகளை மீறியதாக 21 முதல் 30 வயதுக்குட்பட்ட 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அவர்களில் 13 பேர் மீது இன்று திங்கள்கிழமை (செப்டம்பர் 6) குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இருவர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது என்று சிங்கப்பூர் போலீஸ் படை (SPF) திங்களன்று வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 23, 2020 அன்று அதிகாலை 2.25 மணியளவில் செராங்கூன் கார்டன் வழியில் உள்ள ஒரு பப்பில் மக்கள் நுழைவதும் வெளியேறுவதும் பற்றி ஒரு அறிக்கை கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். தகவலறிந்து அதிகாரிகள் அங்கு வந்தபோது 15 பேர் அங்கு கூடியிருப்பதைக் கண்டனர். செய்தி வெளியீட்டில் பெயரிடப்படாத அந்த மதுக்கடை அந்த நேரத்தில் மூடப்பட்டு, “ஒரு தனியார் கூட்டத்திற்கு” பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வீட்டுக்கு வெளியே, ஐந்துக்கும் மேற்பட்டவர்களின் சமூகக் கூட்டங்கள் சிங்கப்பூரில் அனுமதிக்கப்படாது. இந்த குற்றத்திற்கு 10,000 வெள்ளிவரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related posts