TamilSaaga

சிங்கப்பூர்.. சமைத்து உண்ணும் புலம்பெயர் தொழிலாளர்கள் தலையில் விழுந்து “பெரிய இடி” – சமையல் எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்பு!

பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா தடை விதித்துள்ள நிலையில், சமையல் எண்ணெய் விலையில் “மேலும் அழுத்தத்தை” நுகர்வோர் எதிர்பார்க்கலாம் என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MTI) நேற்று வியாழக்கிழமை (மே 5) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“இப்போதைக்கு, இந்தோனேசியாவின் இந்த ஏற்றுமதி தடை சிங்கப்பூரில் சமையல் எண்ணெயின் ஒட்டுமொத்த விநியோகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை. இருப்பினும் சமையல் எண்ணெய் விலையில் மேலும் அழுத்தத்தை எதிர்பார்க்கலாம்” என்று CNAன் கேள்விகளுக்கு பதிலளித்த MTI செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்தோனேசியாவின் ஜனாதிபதி ஜோகோ விடோடோ கடந்த ஏப்ரல் 22 அன்று பாமாயிலை ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதாக அறிவித்தார். இது உள்நாட்டு விலை உயர்வைக் கட்டுப்படுத்த உதவும் என்றும் அவர் கூறினார், ஆனால் அதைத்தவிர மேலதிக விவரங்கள் எதையும் அவர் வழங்கவில்லை.

கடந்த ஏப்ரல் 27 அன்று, ஜகார்த்தா (இந்தோனேஷியா தலைநகர்) கச்சா பாமாயில், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், ப்ளீச் செய்யப்பட்ட மற்றும் டியோடரைஸ் செய்யப்பட்ட (RBD) பாமாயில், பாமாயில் மில் கழிவுகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் ஆகியவற்றை ஏற்றுமதி செய்ய தடை விதிப்பதாக கூறியது.

சிங்கப்பூர் River Valley பகுதியில் கும்மாளம்.. Fountainல் “டால்பின்களாக மாறிய நீர்நாய்கள்” – சிங்கை இணையத்தில் வைரலாக வலம்வரும் வீடியோ

உலகின் மிகப்பெரிய பாமாயிலை ஏற்றுமதி செய்யும் இந்தோனேசியாவின் இந்த அறிவிப்பு, உலகளாவிய சமையல் எண்ணெய் விலைகளை உயர்த்தியது. ஏற்கனவே இந்தோனேஷியா உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் காரணமாக பல விநியோகங்களில் சிரமப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Exclusive : சொந்த ஊரில் தற்கொலை செய்து கொண்ட உடன்பிறந்த சகோதரன்.. இறுதிச்சடங்கிற்கு கூட போக முடியாமல் சிங்கப்பூரில் தவிக்கும் அண்ணன் – இவ்வளவு தானா இந்த வெளிநாட்டு வாழ்க்கை!

சிங்கப்பூர் தனது பெரும்பாலான பாமாயிலை இந்தோனேசியாவிலிருந்து பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020ல் 228 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு பாமாயிலை இறக்குமதி செய்தது என்று சர்வதேச வர்த்தக தரவுத்தளமான BACIலிருந்து தரவுகளை ஆதாரமாகக் கொண்ட பொருளாதார சிக்கலான கண்காணிப்பு அமைப்பு (OEC) தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts