TamilSaaga

சிங்கப்பூர் DBS வங்கியில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்கும் வழிமுறைகள் – இதோ முழு விவரம்

சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கி நிறுவனமான DBS வங்கி புதிய வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

DBS வங்கி புதிதாக சுமார் 150 தொழில்நுட்ப பணிகளுக்கு ஆட்களை தேர்ந்தெடுக்க உள்ளது. இதற்கென வைத்துள்ள பிரத்யேக திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்கும் நபர்களின் ஆற்றலை தேர்வு மூலம் சோதித்து பணியமர்த்த உள்ளது.

DBS Hack 2 Hire என்ற திட்டத்தின் மூலம் ஏறத்தாழ 14 மேம்பாட்டு பணிக்கான ஆட்கள் மற்றும் இதர தொழில்நுட்ப பணிகளுக்கு ஆட்களை தேர்ந்தெடுக்க உள்ளது.

Machine learning மற்றும் BlockChain போன்ற தொழில்நுட்பங்களை விரிவுபடுத்தும் நோக்கில் புதிய பணியாளர்கள் மற்றும் அனுபவமிக்க பணியாளர்களை தேர்ந்தெடுக்கிறது.

இந்த Hack2Hier திட்டம் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு மட்டுமே கொரோனா சூழல் காரணமாக நடக்கவில்லை என்பது கூடுதல் தகவலாகும்.

இந்த பணியில் சேர விரும்புபவர்கள் வருகின்ற அக்டோபர் 17ம் தேதிக்கு முன்பாக https://www.dbs.com/hack2hire/sg/index.html என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
இணைய வழி பலகட்ட இண்டர்வியூ மூலம் பணியாட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts