TamilSaaga

சிங்கப்பூரில் இந்தியருக்கு சிறைத் தண்டனை – “ஏடாகூடமான” செயலால் கடுப்பான போலீஸ்!

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு பிற்பகுதியில் பொதுவெளியில் குடிபோதையில் மற்றவர்களை தொந்தரவு செய்ததற்காக 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்ட ஒரு நபர், சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார். இந்த ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில், அவர் குடிபோதையில் போலீஸ் அதிகாரி மற்றும் பஸ் டிரைவரை மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். தற்போது 65 வயதாகும் மூர்த்தி நாகப்பன், மூன்று துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் மற்றும் பொது இடத்தில் குடிபோதையில் மற்றவர்களை தொந்தரவு செய்ததாக ஒரு குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர், கடந்த திங்கள்கிழமை (டிசம்பர் 27) அவருக்கு ஐந்து வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரின் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு

அந்த சிங்கப்பூரர் இந்த ஆண்டு மார்ச் 28ம் தேதி இரவு 7 மணியளவில் லிட்டில் இந்தியாவிலுள்ள டெக்கா மார்க்கெட் அருகே பேருந்து சேவை 147-ல் ஏறியபோது குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது அவர் தனது முகமூடியை சரியாக அணியாதது தெரியவந்தது. உடனடியாக அந்த முகக்கவசத்தை சரியாக அணியுமாறு பேருந்தின் ஓட்டுநர் நினைவூட்டியபோது, ​​மூர்த்தி அதை கேட்டு அதிருப்தி அடைந்து, அந்த 33 வயதுடைய நபர் மீது அசிங்கமான வார்த்தைகளை பிரயோகித்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்து சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு காவல்துறைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்று மாநில அரசு வழக்குரைஞர் (SPO) ராஜ் கிஷோர் ராய் கூறினார். அடுத்து என்ன நடந்தது என்பதை நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடவில்லை, ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு கடந்த மே 29 அன்று டெக்கா மார்க்கெட் அருகே மூர்த்தி மீண்டும் குடிபோதையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மதியம் 1 மணியளவில் அவர், அவ்வழியாகச் செல்பவர்கள் மீது அநாகரீகமான வார்த்தைகளை பிரயோகித்ததை கண்டு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சார்ஜென்ட் ஜெய்சன் சோங் ஜுன் கிட் (25 வயது), மற்றும் அவரது சகாக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர், உடனடியாக மூர்த்தி அந்த வளாகத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டார். இதுகுறித்து SPO நீதிமன்றத்தில் பேசியபோது : “சார்ஜென்ட் சோங் மற்றும் அவரது சகாக்கள் குற்றம் சாட்டப்பட்டவரை அந்த வளாகத்தை விட்டு வெளியேறுவதை உறுதிசெய்ய அவரை அழைத்துச் சென்றனர் என்றார். “குற்றம் சாட்டப்பட்டவர் டெக்கா மார்க்கெட் முன் சிராங்கூன் சாலையில் பேருந்து நிறுத்தத்தில் இருந்தபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் தன்னைச் சுற்றியிருந்த காவல்துறை அதிகாரி ஒருவரை நோக்கிக் குரல் எழுப்பினார். பின்னர் அவர் மேலும் ஆத்திரமடைந்து காவல்துறை அதிகாரியை திட்டினார்.

Breaking: புத்தாண்டு 2022.. சிங்கப்பூரின் பொது விடுமுறை தினங்கள் என்னென்ன? – முழு பட்டியல் வெளியிட்ட MOM

போலீஸ் கன்டோன்மென்ட் வளாகத்தை நோக்கிச் செல்லும் போலீஸ் வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அவர், சார்ஜென்ட் சோங்கை அநாகரீகமான வார்த்தைகளால் திட்டி, அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். மூர்த்தி அன்றைய தினம் மத்திய காவல் பிரிவில் காவலில் வைக்கத் தகுதியானவர் என்பதை உறுதி செய்வதற்காக மருத்துவ மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டார். அப்போது அவர் மற்றொரு போலீஸ்காரரான சிறப்புக் காவலரான செஸ்வென் சீ சின் ஷென் (20) மீது ஆபாசமான கை சைகை செய்தார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு இப்பொது 5 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts