TamilSaaga

இந்த”5 Technical Skills” இருந்தால் நிறுவனங்கள் உங்களைத்தேடி வரும்; Diploma or Degree இல்லையென்றாலும் இந்த தகுதி இருந்தால் போதும்!

தற்போது இருக்கும் போட்டிமயமான இந்த உலகில் ஒவ்வொருவரும் தங்களின் படிப்பைத் தாண்டி தொடர்ந்து தங்கள் திறன்களை வளர்த்து கொண்டே இருத்தல் அவசியம் ஆகும்.

புது புது வணிகங்கள் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதைப் போன்று , அவற்றுக்கான புது புது திறன்களும் தேவையில் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன, அதிலும் ஒரு சில திறன்கள் வேலை வழங்குபவர்களால் அதிகமாக எதிர்பார்க்கப் படுகின்றன.

பெரும்பான்மையான வேலை வழங்கும் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் மென்திறன்களை வழங்கிட  Workforce Singapore’s Micro Learning Content போன்ற சில தளங்கள் உள்ளன. இவை உங்களுக்கு வேலை நேர்காணல் மற்றும் பணியிட சாப்ட் ஸ்கில்களை இலவசமாக மேம்படுத்த உதவுகின்றன. ஆனால் இந்த சாப்ட் ஸ்கில்ஸ் உடன் சேர்த்து சில கற்றுக்கொள்ள வேண்டிய தொழில்நுட்ப திறன்களும் உள்ளன.

பணிபுரிபவர்கள் தாங்கள் பணிபுரியும் துறைக்கான தனிப்பட்ட ஒரு சில தொழில்நுட்பத் திறன்களை வளர்த்து கொள்வது மட்டுமே அவர்களின் பணியில் நீடிக்கும் தன்மையை அதிகரிப்பதோடு மேலும் பல வேலை வாய்ப்புகளையும் அவர்களுக்கு வழங்கும்.

உலகப் பொருளாதார மன்றத்தின் ( World Economic Forum) எதிர்கால வேலைகள் பற்றிய அறிக்கையின்படி,  கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட தொற்றுநோய்களின் தாக்கத்தினால் தற்போதைய வேலைகளில் தன்னியக்கமயமாக்கல் (Automation) அதிகரித்ததன் காரணமாக, 2025 ஆம் ஆண்டிற்குள் தற்போது பணிபுரிந்து வரும் பாதிப் பணியாளர்களுக்கு மறுதிறன் (Reskill) தேவைப்படலாம் என்று அறிவித்துள்ளது.

மேலும் 75% employer கள் ,  தங்களுக்குத் தேவையான திறமையை பணியாளர்களிடம் கண்டறிவதில் 2022 ம் ஆண்டு முதல் சிரமம் இருப்பதாக தெரிவித்துள்ளதாக ManpowerGroup  இதன் தாக்கத்தை பகிர்ந்துள்ளது  இது 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

உங்களுக்கு ஒரு வேலை இருக்கிறது, ஆனால்  இன்னும் மேலே செல்ல வேண்டுமா? தொழில் மேன்மையை அடையுங்கள், உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள், மேலும் Career GRIT இலிருந்து வரும் ஆதாரங்களுடன் உங்கள் அறிவை விரிவுபடுத்துங்கள்.

ஆனால் முழுநேரமாகத் திறன் கற்பிக்கும் இடங்களுக்கு சென்று திரும்புவது என்பது எல்லோருக்கும் எளிதாக செய்யக்கூடியதாக இருக்காது. எனவே, தேவைக்கேற்ப இந்த திறன்களை உருவாக்க நீங்கள் பதிவுசெய்யக்கூடிய சில படிப்புகளை – இலவச மற்றும் சட்டப்பூர்வமான படிப்புகளை இணையத்தின்  உதவியோடு எப்படி கற்கலாம்? அறிவோம் வாருங்கள்.

உங்கள் தொழில்நுட்பத் திறன்களை வளர்த்து கொள்ள நீங்கள் Diploma அல்லது  Degree க்கு பதிலாக இவற்றை முயற்சிக்கலாம்.

Software development and programming

கொரோனா தொற்றுநோய் சூழலை அடுத்து, அதிகமாக தேவைப்படும் திறன்களில் டிஜிட்டல்  மாற்றம் தொடர்பானவை ஆகும். அந்த வகையில் ஏப்ரல் முதல் அக்டோபர் 2022 வரையிலான தரவுகளின் அடிப்படையில், பணியாளர்கள் அதிகமாக பணியமர்த்தப்பட்ட அல்லது நிறுவனங்கள் தங்கள் அடிக்கடி அறிவித்த வேலை வாய்ப்புகளுக்கான  திறன்கள் இவை ஆகும்.

Datacamp  போன்ற இணையதளங்கள் மூலம் உங்கள் தொழில்நுட்பத் திறன்களை வளர்த்துக் கொள்ள இயலும் , மேலும் இது பலதரப்பட்ட Data தொடர்பான திறன்களை இலவசமாக வழங்குகிறது.  இதில் SQL, Python, Java மற்றும் பிற Programming languages அடங்கும். கூடுதலாக, சிங்கப்பூர் நேஷனல் யுனிவர்சிட்டி, HTML, CSS மற்றும் javascript ஆகியவற்றைப் பற்றி அறிய webcoding Fundamentals பற்றிய இலவச ஆறு வார ஆன்லைன் படிப்பை நடத்துகிறது.

Marketing

LinkedIn தளம் 2023 ல் அதிகம் விரும்பப்படும் 10 திறன் களில் ஒன்றாக Marketing திறனை அறிவித்துள்ளது.

எந்தவொரு தொழில்துறை நிறுவனத்திற்கும் தங்கள் போட்டியாளர்களிடமிருந்து தங்களின் நிறுவனங்களை வேறுபடுத்துவதற்கு Marketing என்பது முக்கியமான வேலை செயல்பாடு ஆகும். மேலும் பிராண்ட் விழிப்புணர்வை உருவாக்குவது, வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான தீர்வுகளை வழங்குவது அல்லது ஈடுபாட்டை மேம்படுத்துவது என பல employer கள் தேடும் ஒரு அடிப்படை திறமை இந்த Marketing skill என்பதில் ஆச்சரியமில்லை.

 Coursera இன்  Digital Media and Marketing Strategies course  மூலம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்த உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள், இதற்கு  சான்றிதழ் கிடைப்பது கூடுதல் சிறப்பு ஆகும்.

மேலும்  சந்தைப்படுத்தல் பற்றிய விரிவான புரிதலுக்கு, Saylor Academy’s Marketing Management  வழங்கும்   Graduate level online course ஐ படிக்கலாம். இதிலும் நீங்கள் வகுப்பை முடித்ததும் ஒரு சான்றிதழைப் பெறலாம்.

Data Analysis

தரவுகளை சேகரிப்பதும், அவற்றை பகுப்பாய்வதும் தற்போதைய கம்பெனிகள் பணியாளர்களிடம் எதிர்பார்க்கும் முக்கிய திறன் ஆகும். இது கம்பெனியின் லாபநஷ்ட போக்கை கணிக்கவும், முக்கியமான முடிவுகள் எடுக்கவும் உதவிடும் திறன் ஆகும்.

இந்த திறனை மேம்படுத்த Coursera அல்லது Udemy  போன்றவை இலவச Data Analytics course ஐ வழங்குகிறார்கள். மேலும் CareerFoundry ஆனது இலவச short Data Analytics கோர்ஸ் ஒன்றை வழங்குகிறது. மேலும் Harvard University நான்கு வார ஆன்லைன் படிப்பையும் வழங்குகிறது, இது Data science இல் பயன்படுத்தப்படும் factor analysis and dimension reduction போன்ற நுட்பங்களில் கவனம் செலுத்துகிறது.

Project Management

ஒரு நிறுவனத்தின் திட்டங்கள் சரியாக செயல்பட திட்ட மேலாண்மை முக்கியமான திறன் ஆகும். இது ஒரு திட்டமானது குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட தகுதியுடன், குறிப்பிட்ட செலவில் முடிவதை உறுதி செய்திட உதவும். இது திட்ட நிர்வாகத்தை ஒரு முக்கிய திறமையாக ஆக்குகிறது.

 Google வழங்கும் 6 மாத வகுப்பான entry-level understanding of project management இல் இத்திறனை மேம்படுத்த இயலும்.

இல்லையெனில் திட்ட மேலாண்மை நிறுவனம்  ( Project Management Institute ) வழங்கும் 45 நிமிட பாடத்திட்டத்தின் மூலம் திட்ட நிர்வாகத்தின் அடிப்படைகளை ஆன்லைனில் கற்றுக்கொள்ளலாம்.

Finance

பொருளாதாரம் மற்றும் வணிக அடிப்படையில் எந்தவொரு கம்பெனியும் தங்கள் நிதியை சிறப்பாக நிர்வகிக்கவே விரும்புவர். தங்கள் நிதிகளைத் திட்டமிடுவது நிறுவனங்களை பொருளாதார நிச்சயமற்ற காலங்களுக்குத் தயாராக்குவதோடு , இதனால் அவர்கள் தங்கள் பணத்தையும் சிறப்பாகக் கட்டுப்படுத்தலாம். இதனால் கம்பெனிகள் விரும்பும் திறன்களில் நிதி தொடர்பானவை நிச்சயம் இடம்பெறுகின்றன.

நிதி துறையில் சிறப்பாக பணியாற்றிட  Account and Corporate Regulatory Authority (ACRA) ஆனது edX உடன் இணைந்து வழங்கும் இரண்டு 6 வார குறுகிய பயிற்சிகளை ஏற்கலாம். இதன் மூலமாக நிர்வாகம் எவ்வாறு சில நிதி முடிவுகளை எடுக்கிறது அல்லது கணக்குப் பராமரிப்பின் அடிப்படைகள் மற்றும் வணிகத்தை நடத்துவதற்கு அது எவ்வாறு உதவுகிறது என்பதைப் பற்றி விரைவாக அறிந்து கொள்ளலாம்.

மேற்கூறிய வகுப்புகள் மற்றும் திறன்கள் பணியில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாது புதிதாக வேலை தேடுபவர்களுக்கும் தேவையான ஒன்றாகும். காலம் மாறும் போது அதற்கேற்றவாறு மாறுபவை மட்டுமே நீடிக்கின்றன என்பது அறிவியல். இது வாழ்விற்கும் பொருந்தும் என்பதை நம்மால் மறுக்க இயலாது.  மாறிவரும் வேலை சூழலுக்கு தகுந்தவாறு தங்கள் திறனை மேம்படுத்துபவர்கள் பணியில் மட்டுமல்லாது வாழ்விலும் வெற்றி பெறுவது உறுதி.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை உள்ளதை உள்ளபடி தெரிந்து கொள்ள தமிழ் சாகா ஃபேஸ்புக் பக்கத்தை நீங்க ஃபாலோ பண்ணலாம்.

Related posts