TamilSaaga

சிங்கப்பூரில் சீன வெளியுறவு அமைச்சர்.. பிரதமருடன் சந்திப்பு – முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சு

சிங்கப்பூருக்கு வருகை தந்திருக்கும் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி அவர்களை இஸ்தானா மாளிகைக்கு வரவேற்று பிரதமர் லீ சியன் லூங் சந்தித்து பேசினார்.

இரு நாடுகளின் நீண்டகால உறவு பற்றி இருவரும் கலந்துரையாடினார்கள். உலகளவிலான மற்றும் வட்டார அளவிலான விவகாரங்கள் தொடர்பாக முக்கிய கருத்துக்கள் பரிமாறிக்கொண்டனர்.

உலகையே தலைகீழாக மாற்றிய கொரோனா பெருந்தொற்றில் உலக நாடுகளின் மீட்பு செயல்பாடுகள் மற்றும் அடுத்தடுத்து சிந்திக்க வேண்டிய நடவடிக்கைகள் பாதுகாப்பு பற்றியும் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணத்திற்கு வந்துள்ள திரு.வாங், சிங்கப்பூரின் துணைப் பிரதமர் திரு.ஹெங் சூவி கியட் மற்றும் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts