TamilSaaga

ஜித்தனுக்கு எல்லாம் ஜித்தன்.. சிங்கப்பூரில் பெரும் உயர் பதவியில் இருந்த கோடீஸ்வரரை.. 4 மாதங்களாக தூங்க விடாமல் சுழட்டி அடிக்கும் “ஹேக்கர்”

எவ்வளவுதான் மனிதன் கஷ்டப்பட்டு உழைத்தாலும் அந்த பணத்தை எல்லாம் ஒரு நொடி பொழுதில் அவர்கள் வங்கி கணக்குகளில் இருந்தோ அல்லது அலைபேசி மூலமாகவோ திருடும் ஹேக்கர்களின் ஆதிக்கம் இந்த டிஜிட்டல் உலகில் அதிகரித்துள்ளது என்றே கூறலாம். அன்மையில் சிங்கப்பூரில் பிரபலமான OCBC வங்கியில் நடந்த அந்த இணையவழி திருட்டு அதற்கு பெரும் சாட்சி.

சிங்கப்பூர் MOM பெயரை சொல்லியே ஏமாற்றும் கும்பல்.. வெளிநாட்டு ஊழியர்கள் உஷாராக இருப்பது எப்படி? – மனிதவள அமைச்சகம் தரும் Tips

இந்நிலையில் சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் சுமார் எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொழில் செய்தும், வசித்து வந்த அண்டை நாடான இந்தியாவை சேர்ந்த சந்தன் குமார் என்பவருடைய வாழ்க்கை தற்பொழுது அது போல “ஹேக்கரிடம்” சிக்கி உள்ளது. மும்பையை சேர்ந்த சந்தன் குமார் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மிகப்பெரிய பொறுப்பில் இருந்து வருகிறார்.

தற்போது அவருடைய சமூக ஊடக கணக்குகள், அலைபேசி எண்கள், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு எண்கள், ஆதார் மற்றும் பாஸ்போர்ட் என்று அனைத்துமே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

குமார் பெரும்பாலும் ஆப்பிள் நிறுவன பொருட்களைத் தான் பயன்படுத்தி வந்துள்ளார், பொதுவாக ஆப்பிள் நிறுவன பொருட்களை ஹேக் செய்வது கடினம் என்பார்கள், ஆனால் அந்த ஹேக்கர் அதை அசாத்தியமாக டீல் செய்து வருகின்றான். குமாரின் செல் போனுக்கு தேவையற்ற அழைப்புகள் வந்து கட் ஆவது. இவருடைய செல்லில் இருந்து வேறு யாருக்காவது கால் போவது என்று இரவில் சரியாக உறங்ககூட விடாமல் குமாரை வதைத்து வருகின்றான் அந்த ஹேக்கர்.

ஒருமுறை குமாரின் மனைவி செல் போனில் இருந்து பணம் கேட்டு அவரது தோழிகளின் எண்ணுக்கு SMSகள் சென்றபோதுதான் குமாரின் மனைவி போனும் ஹேக் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இறுதியில் ஆப்பிள் போன் பயன்படுவதை நிறுத்திவிட்டு புது Android போன் வாங்கி அதில் புதிய சிம் போட்டு பயன்படுத்தினாலும் மறுபடியும் அதை ஹேக் செய்கிறானாம் அந்த பலே ஆசாமி.

இறுதியில் சைபர் போலீசார் குமாருக்கு உதவ ஒரு Professional ஹேக்கரை அனுப்ப, அந்த புதிய ஹேக்கர் எண்ணிற்கு போன் செய்து தொல்லைகொடுத்துள்ளான் அவன். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு பயண இணையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்த பிறகு தான் இந்த பிரச்சனை தனக்கு ஏற்பட்டுள்ளதாக குமார் கூறுகிறார். காரணம் குமார் தனது Password மற்றும் சொந்த பரிவர்தனைகளில் மிகவும் கவனமாக இருப்பவர் என்று கூறப்படுகிறது.

“காதலியின் நடத்தையை கேவலப்படுத்திய சொந்தங்கள்.. அடுத்த நொடி தாலி கட்டி மனைவியாக்கிய இளைஞர்” – சிங்கப்பூரில் உழைத்து இன்று ஊரே வியக்கும் வசதி வாழ்க்கை!

அவருடைய WhatsApp வரை ஹேக் செய்து, வங்கியில் இவர் பேரில் கடன் பெரும் அளவிற்கு அந்த ஹேக்கர் ஆட்டம் தாண்டவமாடி வருகின்றது. தூக்கம் இல்லை, சரியாக சாப்பிட முடியவில்லை, அவனுடைய கைப்பாவைகளாக நாங்கள் உள்ளோம் என்று குமாரை கதறவிட்டுள்ளான் அவன். இன்றளவும் இந்த வழக்கில் போலீசாருக்கும் சைபர் பிரிவு போலீசாருக்கும் ஒரு சின்ன தகவல் கூட கிடைக்கவில்லை என்பது தான் ஆச்சர்யமாக உள்ளது. விரைவில் அவன் பிடிபட்டு குமாரின் வாழ்கை இனிமையாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts