TamilSaaga

சிங்கப்பூரை தாக்கிய முதல் பெரிய நிலத்தாரை – எப்போது நடந்தது தெரியுமா ?

நேற்று சிங்கப்பூர் ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா அருகே நீர்த்தாரை ஒன்று காணப்பட்டது, கடலில் அவ்வப்போது நடக்கும் மிக சாதாரண நிகழ்வு இதுவென்றபோதும் மக்களை இதை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தனர். இந்த நீர்தாரையானது சுமார் 1 முதல் 30 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீர்த்தாரை என்றால் என்ன ?

சூடான அதேசமயம் ஈரப்பதமான காற்று குளிர்ந்து, வறண்ட காற்றோடு மோதுகையில் சூறாவளிகள் உருவாகின்றன. இங்கே அடர்த்தியான குளிர்ந்த காற்று சூடான காற்றின் மீது தள்ளப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளில் பொதுவாக இடியுடன் கூடிய மழை பெய்யும். சூடான காற்று குளிர்ந்த காற்று வழியாக உயர்ந்து, ஒரு நீர்த்தாரையை ஏற்படுத்துகிறது. அது தரையைத் தொடும்போது, ​​அது ஒரு சூறாவளியாக மாறும்.

கடல் மட்டுமின்றி நிலத்திலும் இதுபோன்ற சூறாவளிகளை நாம் பலமுறை பார்த்திருப்போம்.ஆனால் நிலத்திலும் சரி நீரிலும் சரி இது போன்ற சூறாவளிகள் சில சமயம் அதீத சேதத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் நிலத்தாரை

முதன்முதலில் ஒரு நிலத்தாரை இதேபோல கடந்த 2019ம் செப்டம்பர் மாதம் 27ம் தேதி சிங்கப்பூர் நாட்டை தாக்கி சேதங்களை ஏற்படுத்தியதது குறிப்பிடத்தக்கது. Tuas பகுதியில் தான் இந்த நிலத்தாரை தென்பட்டத்து. அதேபோல கடந்த ஜனவரி 2018ல், சிங்கப்பூரின் கிழக்கு கடற்கரை பூங்காவில் ஒரு நீர்த்தாரை பெரிய நீர்த்தாரை தோன்றியது குறிப்பிடத்தக்கது.

Related posts