TamilSaaga

‘முடிந்தவரை வீட்டில் இருந்து பணி செய்க’ – மீண்டும் அறிவுறுத்தும் சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம்

நாட்டில் இதுவரை இல்லாத அளவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. KTV கிளஸ்ட்டர் மற்றும் ஜூரோங் துறைமுக கிளஸ்ட்டர் வாயிலாக தொற்று தொடர்ந்து பரவி வருகின்றது. இந்நிலையில் மீண்டும் சிங்கப்பூரில் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.

மேலும் இந்த இக்கட்டான சூழலில், நிலைமையை சமாளிக்க சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் தற்போது வீட்டில் இருந்து பணிபுரிவது குறித்து ஒரு அறிகையினை வெளியிட்டுள்ளது. மனிதவள அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘நாட்டில் தொற்றின் அளவு அதிக அளவில் பரவி வருவதால் ;தொழிலாளர்களை அந்தந்த நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணிசெய்ய அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளது.

அனைத்து துறைகளிலும் வீட்டில் இருந்து பணி செய்யக்கூடிய வசதியுள்ள பணியாளர்களை வீட்டில் இருந்தே பணிசெய்ய மனிதவள அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அலுவலகத்துக்கு வந்து பணிசெய்யும் தொழிலாளர்களின் சுகாதார நிலையை பாதுகாக்க வேண்டும் என்றும் மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்று (ஜூலை 19) 160க்கும் அதிகமான நபர்களுக்கு தொற்று பரவியது குறிப்பிடத்தக்கது. ஆதலால் அமலில் இருந்து பல தளர்வுகள் மீண்டும் திரும்பபெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts