TamilSaaga

“சிங்கப்பூர் Toa Payoh பகுதியில் விபத்து” : வடிகாலில் சரிந்த Taxi – மருத்துவமனையில் 70 வயது ஓட்டுநர்

நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 26) இரவு தோவா பயோவில் நடந்த விபத்தில் காயம்பட்ட டாக்ஸி டிரைவர் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊடகங்களுக்கு அனுப்பட்ட படங்கள் டிரான்ஸ்-கேப் டாக்ஸி ஒன்று வடிகாலில் பகுதியில் விழுந்து கிடப்பதும், அதன் பக்கத்தில் ஒரு SBS ட்ரான்ஸிட் பேருந்தும் இருந்ததை காணலாம்.

இதையும் படியுங்கள் : “இரு முக்கிய இந்திய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவை”

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) வெள்ளிக்கிழமை இரவு 11.15 மணியளவில் Lorong 6 Toa Payoh மற்றும் Toa Payoh கிழக்கு சந்திப்பில் விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து உடனடியாக போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. Taxiயில் சிக்கியிருந்த 70 வயதான டாக்ஸி டிரைவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தார், விசாரணைகள் நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

“நேற்று மாலை, ஒரு ஆஃப் சர்வீஸ் பேருந்து நேராக Lorong 6 Toa Payoh வழியாகப் பயணித்துக்கொண்டிருந்தபோது, ​​திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் மற்றொரு சாலையில் இருந்து ஒரு டாக்ஸி வெளிவந்தது, இதன் விளைவாக இந்த மோதல் ஏற்பட்டது” என்று SBS டிரான்சிட்டின் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் மூத்த துணைத் தலைவர் திருமதி. டாமி டான் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

“டாக்சி டிரைவர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்” என்றும் அவர் கூறினார்.

Related posts