TamilSaaga

“இரு முக்கிய இந்திய நகரங்களில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவை” : ஏர் இந்திய நிறுவனம் அறிவிப்பு

VTL திட்டத்தின் கீழ் மூடப்பட்டிருந்த தனது எல்லைகளை, படிப்படியாக ஒவ்வொரு நாடுகளுக்காக சிங்கப்பூர் திறந்து வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வரிசையில் நவம்பர் 29ம் தேதி முதல் இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்குமான பயணிகள் விமான சேவைக தொடங்கவிருப்பதாக கடந்த ஞாயிறு அன்று சிங்கப்பூர் விமான போக்குவரத்து ஆணையம் CAAS அறிவித்திருந்தது. அந்த தடுப்பூசி பயணப்பாதை VTL திட்டத்தில் பயணிப்பதற்கான விண்ணப்பங்கள் VTP கடந்த நவம்பர் 22 சிங்கப்பூர் நேரப்படி மாலை 6 மணியிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றது.

இதையும் படியுங்கள் : VTL மூலம் தனிமைப்படுத்துதல் இன்றி சிங்கப்பூர் வர அனுமதி

இந்நிலையில் பல நாட்களாக இந்திய பயணிகள் எதிர்பார்த்த அந்த செய்தி அண்மையில் வெளியானது. SIA எனப்படும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது சேவைகளை வரும் 29ம் தேதி முதல் சென்னை, டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் இருந்து தொடங்கவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்த விமான சேவை நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் முன்பே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல இந்திய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது சிங்கப்பூர் சேவைகளை சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களில் இருந்து வழங்கி வருகின்றது. அதற்கான புக்கிங் தொடர்ந்து நடைபெறும் வருகின்றது. இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனமும் தற்போது இந்தியாவின் இரு முக்கிய இடங்களில் இருந்து விமானங்களை சிங்கப்பூருக்கு இயக்க முடிவு செய்துள்ளது.

dLPF0i(UKyqW$1Crv1C0JI^f

2OyaNHOU9*fSe^Q1p0E@bzrr

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் வரும் நவம்பர் 28ம் தேதி முதல் தினசரி விமானங்கள் இந்திய தலைநகர் டெல்லியில் இருந்தும் அதே போல வாரத்திற்கு இருமுறை மும்பையிலிருந்து விமானங்கள் சிங்கப்பூருக்கு இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு துவங்கியுள்ளதாக அந்நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

Related posts