TamilSaaga

“உலகின் மிக விரிவான டிஜிட்டல் வர்த்தக ஒப்பந்தம்” – சிங்கப்பூருடன் கைகோர்க்க ஒப்புக்கொண்டது பிரிட்டன்

பிரிட்டன் நாடு, சிங்கப்பூருடன் தனது முதல் இலக்கமுறை/ டிஜிட்டல் வர்த்தக ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஏற்படும் மொத்த வருவாய் சுமார் 16 பில்லியன் பவுண்ட் அதாவது இருபத்தி ஒரு பில்லியன் டாலர் அளவிற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டன் நாடு மற்றும் சிங்கப்பூர் இடையே இலக்கமுறை வர்த்தகம் அதாவது டிஜிட்டல் முறை வர்த்தகம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று லண்டனில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இது உலகிலேயே முதல் முறையாக ஒரு ஐரோப்பிய கண்டம், சிங்கப்பூருடன் கையெழுத்திடும் மிக முக்கியமான ஒப்பந்தமாகவும் காணப்படுகிறது.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூருக்கு அதிக விமானங்களை இயக்கி அசத்திய “திருச்சி விமான நிலையம்”

கடந்தமாதம் பிரிட்டனில் நடைபெற்ற வர்த்தக அமைப்பு மாநாட்டில், சிங்கப்பூருடன் கையெழுத்திடவிருந்த இந்த இலக்கமுறை வர்த்தகத்தை பற்றி கூறுகையில், இந்த ஒப்பந்தமானது, மற்ற உலக வர்த்தக அமைப்பு உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஒரு முன்னோடியாக திகழும் என்றும், இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக இலக்கமுறை/டிஜிட்டல் வர்த்தகத்தை சிறந்த முறையில் மேம்படுத்துவதற்கான பல முக்கியமான வழிமுறைகள் இயற்றப்படும் என்றும் கூறியிருந்தனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts