TamilSaaga

ரொம்ப நாளைக்கு பிறகு மக்கள் கொண்டாடும் “சீரியல்” காட்சி – கல்யாணம் என்ற பெயரில் கூத்தடிக்கும் இளசுகளை விட்டு விளாசிய “சன் டிவி”

இப்போதெல்லாம் கல்யாணம் என்றால், மாப்பிள்ளை மற்றும் மணப்பெண்ணை விட, அகில உலக ரேஞ்சுக்கு Wedding Photography எடுப்பவர்களுக்கு தான் அதிக மவுசு இருக்கிறது. கல்யாணத்துக்கு முன் எடுக்கப்படும் ‘Pre-Wedding Photography’ , கல்யாணத்துக்கு பிறகு எடுக்கப்படும் ‘Post Wedding Photography’ என்று இவர்கள் அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லை.

‘Pre-Wedding Photography’ என்ற பெயரில் கல்யாண மாப்பிள்ளையையும், பொண்ணையும் எங்கேயாவது காட்டுக்கு கூட்டிச் சென்று உருல விடுவது, ஆபத்தான கடல் பகுதிகளுக்கு கூட்டிச் சென்று புரள விடுவது, ஓடும் ஆற்றில் குளிக்க வைப்பது என்று கணக்கே இல்லாத அளவுக்கு வெரைட்டி காட்டுவார்கள்.

இன்னும் சிலரோ ஒருபடி மேலே சென்று, மாப்பிள்ளையையும், பெண்ணையும் முத்தம் கொடுக்க வைப்பது, முதலிரவு செட் போட்டு அதில் காமெடியாக ஒத்திகை பார்க்க வைப்பது (Creative thinking-காமாம்), படகில் கூட்டிச் சென்று குப்புற விழ வைப்பது, வெறும் ஒற்றை டவலை கொடுத்து, மாப்பிள்ளைக்கு மட்டும் உடம்பை காட்டச் செய்வது என்று விபரீதமான கூத்துக்களையும் அடித்து தான் வருகின்றனர். இதில், கேரளா சேட்டன், சேச்சிகள் கொடூரமான லெவலுக்கு தான் திங்கிங் பண்ணுகின்றனர்.

இப்படியொரு கோஷ்டி ஒருபக்கம் இருக்க, இன்னொரு கோஷ்டி ஒன்று உள்ளது. அதாவது, அந்த கோஷ்டி கல்யாணத்தில் வந்து சம்பந்தமே இல்லாமல் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும். ஏதாவது ஒரு பாட்டை போட்டுவிட்டு, அதற்கு சினிமா ஹீரோ, ஹீரோயின்களை விட பயங்கரமாக ஸ்டெப் போட்டு, மணப்பெண் அறையில் இருந்து பெண்ணை மணமேடைக்கு அழைச்சிட்டு வருவாங்க.

மேலும் படிக்க – Exclusive : சிங்கப்பூரில் 100 நாட்களுக்கு முன் காணாமல் போன தமிழக தொழிலாளி வரதராஜன் – கண்டுபிடித்துத் தர “தமிழ் சாகாவிடம்” வேண்டுகோள் விடுத்த தங்கையின் கணவர்

இப்படி திருமணம் எனும் பெயரில் நடக்கும் கூத்துக்களை, நம்ம தமிழ் நடிகர் மாரிமுத்துவை வைத்து விளாசித் தள்ளியிருக்கிறது சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்று. ஆம்! பரியேறும் பெருமாள், பைரவா, நிமிர்ந்து நில், உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் மாரிமுத்து, சன் டிவி சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார்.

அந்த சீரியலில், பெண் ஒருவருக்கு கல்யாணம் நடக்கிறது. அதில், நாம் சொன்னது போல், மணப்பெண்ணை அழைத்துக் கொண்டு ஒரு குரூப் டான்ஸ் ஆடிக் கொண்டே வருகிறது. அந்த பெண்களை தடுத்து நிறுத்தும் மாரிமுத்து, அவர்களை மிகக் கடுமையாக விமர்சிக்கும் படியாக அந்த காட்சி எடுக்கப்பட்டுள்ளது.

அதில் பேசும் மாரிமுத்து, “கல்யாண வீட்டுல வந்து இப்படி டான்ஸ் ஆடிக்கிட்டு இருக்கீங்க? அறிவில்ல? அதற்கு அந்த டான்ஸ் கூட்டத்தில் இருக்கும் பெண் ஒருவர், ‘இல்ல அங்கிள்.. இதுதான் டிரெண்டு’ என்று கூற, ‘ஆ.. ஊ..ன்னா இத ஒன்னும் சொல்லிடுங்க.. டிரெண்டு, டொன்டு-னு. இப்படித்தான் எல்லா கல்யாண வீட்டுலையும் ஆடிக்கிட்டு இருக்கானுங்க. நானும் பார்த்துகிட்டு தான் இருக்கேன். சினிமாவுக்கு வேணும்-னா இது சரியா இருக்கலாம். எல்லாரும் ஆ…ன்னு வாய பொளந்துக்கிட்டு என்னத்த காட்றாங்க-னு பார்த்துக்கிட்டு இருப்பானுங்க. கல்யாண வீட்டுக்கெல்லாம் இது சரியா வராது..

கல்யாண மணவறை-ங்குறது கோயில் மாதிரி. புனிதமான இடம். இங்க வந்து ஆட்டம் போட்டா, கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்குறவங்களோட வாழ்க்கையே ஆடிப்போயிடும். தாலி வாங்க போற பொண்ணை வச்சிக்கிட்டு டான்ஸ் ஆடிக்கிட்டு இருக்கீங்க??? அறிவில்ல உங்களுக்குலாம்??? கல்யாண வீடுன்னா ஒரு கலாச்சாரம் வேண்டாமா? பண்பாடு வேண்டாமா? ஆயிரம் காலத்து பயிருன்னு என்ன சும்மாவா சொல்றாய்ங்க?” என்று மாரிமுத்து கிழித்துக்கொண்டிருக்க குறுக்கே ஒரு போட்டோகிராஃபர் ஓடி வருகிறார்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் வேலை.. நீண்ட காலம் மனைவியை பிரிந்திருக்க வேண்டிய கட்டாயம் – உளவியல் ரீதியாக “உடலுறவில்” ஏற்படும் சிக்கல்கள் என்ன?

அவரையும் விடாத மாரிமுத்து ,”யாருடா நீ?” என்று கேட்க.. அவரோ ‘Wedding Photographer” என்று சொல்ல, “கல்யாணத்துக்கு முன்னாடியே பொண்ணையும், பையனையும் கட்டிப்பிடிக்க வைக்கிறது, இடுப்புல உட்கார வைக்கிறது, மடியில உட்கார வைக்கிறது, முத்தம் கொடுக்க வைக்கிறது.. இதுதான் கலாச்சாரமா டா? இவைங்களுக்கு பேரு Wedding Photographer.. எங்கிருந்து வந்துதுடா இந்த கலாச்சாரம்? யாருடா உங்களுக்கு இதெல்லாம் கத்துக்கொடுத்தா? அந்த காலத்துல எல்லாம் ஐயர் மந்திரம் சொல்லி, நேரம் பார்த்து தாலி எடுத்து கொடுத்து கட்டச் சொல்வாங்க.. நீ என்னன்னா.. தாலி கட்டுற நேரத்துல, ‘நிப்பாட்டுங்க.. இன்னொரு போஸ் கொடுங்க-னு சொல்லுற.. நீ போட்டோ எடுக்குற வரை நல்ல நேரம் காத்துக்கிட்டு இருக்குமா? பதில் சொல்றா? Wedding Photography எடுக்குற மூஞ்சையும், முகரக்கட்டையும் பாரு..வந்துட்டாய்ங்க…” என்று பொளந்து கட்டிவிட்டார்.

சீரியல் தான் என்றாலும், இவர் பேசிய ஒவ்வொரு வசனங்களும் கிளாப்ஸ் வாங்குகிறது. சாமானிய மக்களின் எண்ணத்தை அப்படியே தனது வசனத்தின் மூலம் பிரதிபலித்து இருக்கிறார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts