சிங்கப்பூரில் இன்று ஆகஸ்ட் 22, 2021ம் தேதி, பெடோக் தொழில்துறை பூங்கா E ப்ளாக்கில் உள்ள ஒரு கான்கிரீட் கட்டமைப்பின் ஒரு பகுதி சரிந்தது விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 40 மீட்டர் நீளம் கொண்ட இது நான்கு மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் இருந்து சரிந்து விழுந்ததால் அந்த இடிபாடுகள் ரையில் விழுந்ததாக சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது.
இன்று காலை 9.10 மணியளவில் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினருக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்த சென்ற SCDF மீட்பு பணியில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட பகுதியில் தேடுதல் நடத்திய பின்னர் யாரும் இந்த இடிபாடுகளில் சிக்கியிருக்கவில்லை என்றும். மேலும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடந்து வருகின்றது.