TamilSaaga

ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 570 பேரை அழைத்துவந்துளோம் – பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம்

கடந்த திங்கட்கிழமை முதல் இந்த ஒரு வார காலத்தில் 407 ஆப்கானிஸ்தான் குடிமக்கள் உள்பட 570 பேரை அங்கிருந்து வெளியேற்றி பிரான்ஸ் நாட்டுக்கு கொண்டுவந்துள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் பிரான்ஸ் நாட்டின் நான்காவது மீட்பு விமானம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தரையிறங்கியது என்றும் அதில் நான்கு பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த குடிமக்களும் அதனைத் தொடர்ந்த 99 ஆப்கானிஸ்தான் மக்களும் இருந்ததாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து திரும்பப் பெறப்பட்ட நிலையில் தலிபான்களின் ஆதிக்கம் அங்கு அதிகரித்து வந்தது. இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் நாட்டின் பல முக்கிய நகரங்களை தலிபான் அமைப்பினர் கைப்பற்றிய நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் நகரின் தலைநகராக கருதப்படும் காபூலில் தலிபான் அமைப்பினர் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து அந்நாட்டில் இருந்து பிரதமர் மற்றும் துணை பிரதமர் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்கள் மக்களை சிறப்பு விமானங்கள் மூலம் மீட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டு அரசும் இதுவரை சுமார் 570 பேரை பிரான்ஸ் நாட்டில் இருந்து அழைத்து வந்து உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Related posts