இந்தியாவின் வரைபடம் திரையில் காண்பிக்கப்பட்டது, அதன் மாநில எல்லைகள் முற்றிலும் அகற்றப்பட்டு இருந்தன. மாநிலத் தலைநகரைக் குறிக்கும் விதத்தில் வரைபடத்தில் ஒரு குறியீடு மட்டும் இருந்த நிலையில், போட்டியாளர்கள் தலைநகர் மற்றும் அதனுடன் தொடர்புடைய மாநிலத்தின் பெயரைக் குறிப்பிட வேண்டும் இது தான் அந்த போட்டி. இந்த ஆண்டு ஜனவரியில் லண்டன் கிங்ஸ் கல்லூரி மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி மாணவர் போட்டியாளர்களுக்கு இடையே பிரபலமான, நீண்டகாலமாக இயங்கும் பிரிட்டிஷ் தொலைக்காட்சி வினாடி வினா நிகழ்ச்சியான University Challenging கால் இறுதிப் போட்டி நடந்தது.
இந்த போட்டியில் பங்கேற்ற இம்பீரியல் கல்லூரியின் அணியில் இருந்த ஒரு சிங்கப்பூர் வீரர் மாக்சிமிலியன் ஜெங் இந்த போட்டியை கண்டு கவலைப்படவில்லை. உயிர்வேதியியல் மாணவராகிய அவர், இந்தியாவை பற்றிய அந்த கேள்வி திரையில் வந்த உடனே சற்றும் தாமதிக்காமல் buzzerஐ அழுத்தி பதிலை மின்னல் வேகத்தில் கூறினார். அவர் கூறிய பதில் தலைநகர் சென்னை, அதனோடு தொடர்புடைய மாநிலம் தமிழ்நாடு என்பது தான். இந்த வினாடி வினா நிகழ்ச்சியை அடிக்கடி பார்க்கும் பிரிட்டிஷ் மக்களால் புகழப்படும் ஒரு நபர் தான் ஜெங்.
அந்த வெற்றியை தொடர்ந்து இம்பீரியல் கல்லூரி இதே போன்ற மூன்று போனஸ் கேள்விகளைப் பெற்றது. அந்த மூன்று கேள்விகளுக்கும் லக்னோ, உத்தரப்பிரதேஷ். போபால், மத்தியபிரதேசம் மற்றும் கொல்கத்தா, West Bengal என்று அசத்தலாக வரிசைகட்டி அடித்தார் அந்த 21 வயது மாணவன். குறிப்பிட்ட எபிசோடைக் காட்டும் ஒரு YouTube வீடியோவின் கமெண்ட் பிரிவில், “எந்தவொரு வரைபடத்தையும் சேர்ப்பதற்கு முன்பு Google Maps Zengக்கு வழங்குவதாக ஒரு வதந்தி உள்ளது” என்று நகைப்புடன் கூறியுள்ளார்.
மற்றொருவர் கருத்து தெரிவிக்கும்போது, “நீங்கள் ஜெங்கை பசிபிக் நடுவில் இறக்கிவிடலாம், வீட்டிற்கு செல்லும் வழி அவருக்கு தெரியும்.” சிலர் அவரை “GPS ஜெங்” என்றும், மற்றொருவர் அவரை “The Human Atlas” என்றும் அழைத்தனர். இந்த Maps மீதான அவருடைய ஆசை அவருக்கு மூன்று வயதாக இருந்தபோது தொடங்கியது என்று கூறப்படுகிறது. அப்போது தான் ஜெங் தனது முதல் உலக வரைபடத்தைப் பெற்றார், மேலும் அவருக்கு ஆறு வயதாகும் போது, அவர் அனைத்து நாடுகளையும் தலைநகரங்களையும் மனப்பாடமாக கூறும் திறனோடு இருந்தார்.
இந்த காலகட்டத்தில் 193 என்ற அளவில் உள்ள நாடுகளில் 180 நாடுகளின் நிர்வாகப் பிரிவுகள், முதல் நிலைப் பிரிவுகள் என வரைபடத்தில் உள்ளதை என்னால் பெயரிட முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்கிறார் சென். Maps என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்திருக்கின்றன,” என்று அவர் CNAக்கு ஜூம் கால் மூலம் கூறினார்.