TamilSaaga
marine shipyard

Marine Shipyard சிங்கப்பூரில் துறையில் வேலைக்கு சேரணுமா? 1200 சிங்கப்பூர் டாலர் சம்பளமா? அதுக்கு முன்ன இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க

Marine Shipyard: சிங்கப்பூரில் வேலைக்கு செல்ல பல வொர்க் பாஸ்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் அடிப்படை சம்பளமாக கொடுக்கப்படும் Marine Shipyardல் வேலைக்கு சேர வேண்டும் என நினைக்கும் உங்களுக்கு தான் இந்த பதிவு. எப்படி வேலைக்கு சேரலாம் என்னலாம் இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Marine Shipyard ஊழியர்கள்:

சிங்கப்பூரில் Marine Shipyardல் வேலை செய்து வரும் ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டு வரும் பாஸ் தான் PCM பெர்மிட். இந்த பாஸில் வேலைக்கு வர நினைக்கும் ஊழியர்களுக்கு ஏஜென்ட் கட்டணமாக 2 லட்ச ரூபாய் கேட்கப்படும். ஒரு நாளைக்கு சம்பளமாக $15 முதல் $18 சிங்கப்பூர் டாலர் சம்பளமாக கொடுக்கப்படும். ஆனால் MOM விதிப்படி Marine shipyardல் வேலை செய்யும் ஊழியர்களுக்கு 1200 சிங்கப்பூர் டாலர் வரை சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இதை பல கம்பெனிகள் செய்வதில்லை. மற்ற வொர்க் பாஸ்களை போல இதிலும் OT இருக்கும். அதற்கும் தனிப்பட்ட வகையில் சம்பளம் தரப்பட்டு வருகிறது.

இந்த துறையில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் போது கம்பெனி நிர்வாகம் சில விஷயங்களை குறிப்பாக பார்க்க வேண்டும். பொதுவான வொர்க் பெர்மிட் கட்டுப்பாடுகளும் இதில் அடங்கி இருக்கும். இந்திய ஊழியர்களை Non-traditional sources எனப்படும் NTS என அழைக்கிறார்கள்.

இதையும் படிக்க: சிங்கப்பூரில் construction துறையில் வேலைக்கு போகணுமா? வாய்ப்புகள் எப்படி இருக்கும்… MOM சொல்வது என்ன?

குறைந்தபட்ச வயது 18ஆக இருக்கும் ஊழியர்களுக்கு அதிகபட்ச வயது 50ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. Basic ஸ்கில் முடித்த ஊழியர்கள் 14 வருடம் வரை சிங்கப்பூரில் வேலை செய்யலாம். Higher-skilled முடித்த R1 ஊழியர்கள் 26 வருடம் சிங்கப்பூரில் வேலை செய்யலாம்.

இந்த வகையான வொர்க் பெர்மிட் வைத்திருப்பவர்கள் Marine Shipyard வளாகத்திற்குள் வேலை செய்ய வேண்டும். நீங்கள் பணியமர்த்தக்கூடிய வொர்க் பெர்மிட் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட quotaவால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Marine Shipyard துறை ஒதுக்கீட்டின் கீழ், உள்ளூர் பணியாளர்கள் சம்பளத்தைப் பெறும் ஒவ்வொரு உள்ளூர் ஊழியருக்கும் 3.5 வொர்க் பெர்மிட் வைத்திருப்பவர்களை கம்பெனி நியமிக்கலாம்.

மேலும் Higher skilled முடித்த வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கம்பெனி குறைவான லெவி செலுத்த முடியும். கீழ்வரும் சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை தொழிலாளர்கள் முடிக்கும் பட்சத்தில் அவர்களுக்கான லெவி குறையும்.

*SET Level 1 அல்லது National ITE Certificate (Nitec)
*வெல்டிங்கில் 3G மற்றும் அதற்கு மேல்

மேலும், சிங்கப்பூரில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வொர்க் பெர்மிட் கொண்டு பணியாற்றி இருக்க வேண்டும். அவர்களின் வொர்க் பெர்மிட் வழங்கப்படுவதற்கு முன், Marine Shipyard துறையில் முதல் முறையாக சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் IPA அப்ரூவலின் படி சிங்கப்பூர் திரும்பும் தொழிலாளர்கள் Settling-in Programme (SIP) கலந்து கொள்ள வேண்டும்.

இதையும் படிக்க: சிங்கப்பூரில் வேலைக்கு செல்ல ஆசைப்படும் உங்களுக்கு தெரியுமா… SPass Apply செய்ய வெறும் 12000 ரூபாய் தானா? ஆனா லட்சத்தில் கட்டணம் கேட்கும் ஏஜென்ட்கள்?

Marine Shipyard துறையில் வெளிநாட்டு தொழிலாளர்கள்:

வொர்க் பெர்மிட்களைப் பெறுவதற்கு முன், இந்தப் Security course ஒன்றை முடிக்க வேண்டும்.

*Shipyard Safety Instruction Course for Workers (General Trade) (SSICGT)
*Apply Workplace Safety course and Health in Shipyard (General Trade)

தொழிலாளர்கள் சிங்கப்பூர் வந்து இரண்டு வாரத்திற்குள் இதை முடித்திருக்க வேண்டும். ஃபெயில் ஆனால் மீண்டும் அதை விரைவாக courseஐ செய்து விட வேண்டும். 6 வயதுக்கு குறைவாக marine shipyardல் வேலை செய்யும் ஊழியர்கள் 2 வருடத்திற்கு ஒருமுறை இந்த கோர்ஸினை முடிக்க வேண்டும். 6 வருடங்களுக்கு மேல் இருப்பவர்கள் 4 வருடத்திற்கு ஒருமுறை safety course முடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts