TamilSaaga

சிங்கப்பூர் கிராஞ்சியில் காண்போரை ஆச்சர்யப்படுத்தும் Cai Shen சிலை – இரண்டாவது மாடியில் ஏற்றியது எப்படி?

சிங்கப்பூரின் கிராஞ்சி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சுமார் 6 மீ உயரமுள்ள காய் ஷென் கடவுளின் (செல்வத்தின் கடவுள்) சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது 2022 சீனப் புத்தாண்டை வரவேற்கும் வகையில் ஒரு தனியார் இடத்தின் இரண்டாவது மாடியில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சீன நாளிதழான ஷின்மின் டெய்லி நியூஸ் கூற்றுப்படி, அந்த செல்வத்தின் கடவுள் சிலை, கிரேன் மூலம் உயர்த்தப்பட்டு வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள பால்கனியில் வைக்கப்பட்டுள்ளது.

“இது செம Offer” – ஆனா பிப்ரவரி 15 முதல் மார்ச் 18 வரை தான்” : திருச்சி – சிங்கப்பூர் பயணம், அசத்தல் சலுகை தரும் Scoot

வெளியான அந்த காணொளியில் தங்க முலாம் பூசப்பட்ட அந்த “பொறுப்புடன் செயல்படும் சிங்கப்பூரர்கள்” – சீனப்புத்தாண்டுக்கு “இதையும்” அதிக அளவில் வாங்குறாங்களாம்!

ஷோபீஸ் சிலை தவிர, வீட்டிற்கு வெளியே ஆறு பெரிய ஆரஞ்சுகள், பூக்கள் மற்றும் ஒரு பெரிய பட்டாம்பூச்சி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த வீட்டின் முன் நான்கு சீன எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. அந்த வீட்டினரை நேரில் சென்று கண்ட சில அக்கம்பக்கத்தினர், பிரம்மாண்டமான சிலை ஒரே இரவில் அங்கு வைக்கப்பட்டதை கண்டு ஆச்சரியமடைந்ததாகவும், அதன் நல்ல அதிர்ஷ்ட அதிர்வுகளை வெளிப்படுத்தி ஆசீர்வதிக்கப்படுவதை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் அந்த பகுதியை வாகனத்தில் கடந்து சென்றவர்களும் ஆச்சர்யத்துடன் அந்த சிலையை பார்த்து சென்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts