TamilSaaga

“மீண்டும் UKவிற்கு அனுப்பப்பட்டார் பெஞ்சமின்” – இனி சிங்கப்பூருக்கு வர முடியாது : என்ன நடந்தது?

சிங்கப்பூரில் முகமூடி அணியத் தவறியது உள்ளிட்ட பல குற்றங்களில் சிங்கப்பூரில் தண்டனை பெற்ற பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த பெஞ்சமின் கிளின் ஐக்கிய இராச்சியத்திற்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையம் (ஐசிஏ) நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 20) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கிளின் சிங்கப்பூருக்குள் மீண்டும் நுழைய தடை விதிக்கப்படும் என அந்த ஆணையம் கூறியுள்ளது.

சிங்கப்பூர் சிறைக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், 40 வயதான அவர் கடந்த புதன்கிழமை ஐசிஏவிடம் ஒப்படைக்கப்பட்டார். கிளின் புதன்கிழமை ஒரு நாளில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டார். மற்றும் முகமூடி அணியத் தவறியது, பொதுத் தொந்தரவு மற்றும் ஒரு பொது ஊழியரை நோக்கி அச்சுறுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்திய நான்கு குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது.

முன்னதாக ஜூலை 19, 2021 அன்று அவருக்கு ஆறு வார சிறைத்தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 4 வரை சிறையில் அடைக்கப்பட்டார், பின்னர் ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 18 வரை மனநல நிறுவனத்தில் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டார்.

சிங்கப்பூரில் விதிக்கப்பட்டிருக்கும் கடுமையான சட்டங்களை முறையாக பின்பற்றாத நிலையில் தற்போது பெஞ்சமின் சிங்கப்பூரில் இருந்து வெளியேற்றப்பெற்று லண்டனுக்கு அனுப்பப்படுகிறார். அவர் இனி சிங்கப்பூர் வர தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts