TamilSaaga

சிறுநீரிலிருந்து பீர் தயாரிக்கும் சிங்கப்பூர் நிறுவனம்.. அச்சு அசல் ஒரிஜினல் டேஸ்ட் – வல்லரசு நாடுகள் ஆச்சர்யம்!

“அட! அப்டியா! டெஸ்ட் செஞ்சு பார்த்துடுவோம்” என்று மதுப்பிரியர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம். ஆம்! இந்நிறுவனம் சிறுநீர் மற்றும் கழிவுநீரை மறுசுழற்சி செய்து ‘க்ரீனஸ்ட் பீர்’ (Greenest beer) என்ற புதுவகையான மதுபானத்தைத் அறிமுகப்படுத்தியுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக, மறுசுழற்சி வகையில் பொருட்களை தயாரிப்பதில் உலகின் முன்னணி நாடாக விளங்குகிறது சிங்கப்பூர்.

அந்த வகையில், சிறுநீர் மற்றும் கழிவுநீரை குடிப்பதற்கு ஏற்ற நீராக மறுசுழற்சி மூலம் மாற்றி ‘நியூ வாட்டர்’ (Newater) என்ற பெயரில் தண்ணீராக மாற்றி வருகிறது சிங்கப்பூர்.

மேலும் படிக்க – “லாரன்ஸ் வோங் எனும் நான்…” சிங்கப்பூரின் புதிய துணை பிரதமராக பதவியேற்கும் “சிம்மக்குரலோன்” – 50 லட்சம் மக்களின் “பேராதரவு” குரல்

இந்த ‘நியூ வாட்டர்’ பாதுகாப்பான குடிநீரின் சர்வதேச தரத்தை நிகர் செய்வது மட்டுமின்றி, மதுப்பிரியர்கள் விரும்பும் ‘பீர்’ தயாரிக்கவும் ஏதுவான நீராக உள்ளது என்று கூறப்படுகிறது.

இப்படி மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மதுபானம் ‘Newbrew’ என்று அழைக்கப்படுகிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த ‘எஸ்போர் (S’pore) என்ற நிறுவனம் இந்த வகை மதுபானங்களை உற்பத்தி செய்து வருகிறது.

இவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் தயாரிக்கப்படுவதால் வகையில் ‘க்ரினஸ்ட் பீர்’ என்று இந்நிறுவனம் அழைக்கிறது. ‘நியூ வாட்டர்’ உடன் தரமான பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால் பீரின் உண்மையான டேஸ்ட் இதிலும் இருப்பதாக சொல்கின்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts