TamilSaaga

அப்படியே அறுந்து விழுந்த Bedroom Ceiling.. 100 கிலோ வெயிட்.. சிங்கப்பூரில் இயற்கையின் சக்தியால் 3 குழந்தைகளுடன் உயிர் தப்பிய குடும்பம்

சிங்கப்பூரில் வீட்டின் படுக்கையறையின் மேற்கூரை பெயர்த்துக் கொண்டு விழுந்த நிலையில், 3 குழந்தைகள் உட்பட ஒரு குடும்பமே இயற்கையின் சக்தியால் உயிர் தப்பித்துள்ளது.

சிங்கப்பூரில் fertility wellness centre நடத்தி வருபவர் Wendy Liu (40). இவரது குடியிருப்பு, Queenstown பகுதியின் Dawson சாலையில் உள்ளது. இவர் நான்கு அறை கொண்ட Housing Board flat-ல் வசித்து வந்தார். இவரது கணவர் Vincent Chang. இவர்களுக்கு 3 ஆண் பிள்ளைகள் உள்ளனர். 1 வயது, 2 வயது மற்றும் 8 வயது என்று மூன்று பிள்ளைகள்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூன்.8) மாலை அவர்கள் வீட்டின் Master பெட்ரூமின் சீலிங் பெயர்த்துக் கொண்டு அவர்கள் தினம் பிள்ளைகளுடன் படுத்து உறங்கும் கட்டிலின் மேல் விழுந்ததில், கட்டிலின் ஒரு பகுதியியே நசுங்கி விட்டது.

அந்த நேரத்தில் வீட்டில் இருந்தது பணிப்பெண் மட்டும் தான். சீலிங் பெயர்ந்து விழுந்ததில் ஆடிப்போன அந்த பணிப்பெண், அலுவலகத்தில் இருந்த Wendy Liu-க்கு தகவல் சொல்ல அவருக்கு சகலமும் ஒடுங்கிவிட்டது. ஈரக்கொலை நடுங்க அவர் தன் குடும்பத்தினர் பற்றி விசாரிக்க, அறையில் யாரும் இல்லை என்று பணிப்பெண் சொன்ன பிறகே அவருக்கு போன உயிர் திரும்ப வந்தது.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் இந்தியர்களுக்கு மாதம் “9 லட்சம்” வரை சம்பளம்.. இளைஞர்கள் குறிவைக்கும் வேலை – வியக்க வைக்கும் Forbes அறிக்கை

உண்மையில் அந்த நேரத்தில் Wendy Liu-ன் கணவர் தனது பிள்ளைகளுடன் அதே அறையில் இருந்திருக்க வேண்டியது தான். ஆனால், அன்றைய தினம் தனது பிள்ளைகளுடன் புகைப்படங்கள் எடுக்க அருகே உள்ள விளையாட்டு மைதானத்துக்கு அவரது கணவர் சென்றதால், மிகப்பெரிய உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அதாவது, அவரது குடும்பமே தப்பியது.

இந்த சம்பவம் குறித்து “தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்” பத்திரிக்கையிடம் பேசிய Wendy Liu, “அந்த சீலிங் எங்கள் மேல் விழுந்திருந்தால், நிச்சயம் நாங்கள் அனைவரும் உயிரிழந்திருப்போம். எனது பிள்ளைகள் மூவரும் உடல் நசுங்கி உயிரிழந்திருப்பது போல நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. நான் இன்னும் அந்த பயத்தில் இருந்து தெளியவில்லை.

ஐந்து வருடங்களாக இந்த குடியிருப்பில் தான் வசித்து வருகிறோம். இந்த ஆண்டு ஜனவரியில் தான் வீட்டை புதுப்பித்தோம். அப்போதுதான் False ceiling எனப்படும் அந்த மேற்கூரை நிறுவப்பட்டது. 100 கிலோ எடையுள்ள அந்த False ceiling வெறும் 4 சிறிய Screws-களின் ஆதரவில் தான் இருந்தது. அதனால் தான் அழுத்தம் தாங்க முடியாமல் விழுந்திருக்கிறது என்று நினைக்கிறோம்” என்றார்.

இந்நிலையில், ஷின் மின் டெய்லி நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ஜனவரி மாதம் இந்த False ceiling-ஐ அமைத்துக் கொடுத்த எஸ்ஆர் டெக் இன்ஜினியரிங் நிறுவனம், இந்த சம்பவத்துக்கு பிறகு Wendy Liu-வின் குடும்பத்தை ஒரு ஹோட்டலில் பல நாட்கள் தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வீட்டின் அனைத்து பணிகளையும் மீண்டும் செய்து கொடுத்து, இழப்பீடாக அவர்களுக்கு False ceiling அமைக்கப்பட்ட விலையை விட இருமடங்கு வழங்க முன்வந்துள்ளது. அதன் தொகை $1,600 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன பாஸ் நீங்க! உயிர் போனா திரும்ப கொடுத்திருப்பீங்களா?

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts