TamilSaaga

“சிங்கப்பூர் Pocari Sweat ஓட்டப்பந்தயம்” – பந்தய தூரத்தை 6.52 நிமிடங்களில் கடந்து அசத்திய ஜீவனேஷ் சௌந்தரராஜா

சிங்கப்பூரில் Pocari Sweat 2.4km Challenge கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட பின்னர் இறுதியாக நேற்று சனிக்கிழமை (ஜனவரி 8) நடைபெற்றது. 24 வயதான கூர்க்கா சுபாஸ் குருங் உட்பட சிங்கப்பூரின் வேகமான ஓட்டப்பந்தய வீரர்கள் சிலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இந்த பந்தயத்தில் பங்கேற்ற சிங்கப்பூரின் சிறந்த வீரர்களின் பட்டியல்..

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரர்களே உஷார் : “Shopee Pay” என்ற பெயரில் உலா வரும் “மோசடி செயலி” – எச்சரிக்கும் சிங்கப்பூர் போலீஸ்

கடந்த ஆண்டு 6 நிமிடம் 53 வினாடிகளில் 2.4 கி.மீ பந்தய தூரத்தை கடந்த தேசிய தடகள வீரர் சோ ருய்யோங்.

இராணுவத்தில் இருந்தபோது 7 நிமிடம் 6 வினாடிகள் 2.4 கிமீ தூரத்தை எட்டிய எதன் யான்.

ஜீவனேஷ் சௌந்தரராஜா, 2015 SEA விளையாட்டுப் போட்டியின் போது 5,000 மீட்டருக்கான சிங்கப்பூரின் பிரதிநிதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் தேசிய நடுத்தர தூர தடகள வீரர் திருபென் தன ராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்கள் : “பலத்த சத்தத்துடன் வெடித்த கார்” : பற்றியெரிந்த காருக்குள் சிக்கிய ஓட்டுநர் – சிங்கப்பூரில் ஏற்பட்ட சோகம்

வெகு சுவாரசியமாக நடந்த இந்த போட்டியில் ஜீவனேஷ் 6 நிமிடம் 52 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெற்றி பெற்றார். இந்த நேரம் கடந்த ஆண்டு செப்டம்பரில் சோவின் அதிகாரப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்ட 6 நிமிடங்கள் 53 வினாடிகளை விட சற்று வேகமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் குருங் 6 நிமிடம் 54 வினாடிகளில் கடந்து இரண்டாவது இடத்தையும், சோஹ் 6 நிமிடம் 55 வினாடிகளில் கடந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். மேலும் யான் சப் ஒன்பது வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து நான்காவது இடத்தைப் பிடித்தார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts