TamilSaaga

தடுப்பூசி போடும் பணிக்கு தயாராகும் சிங்கப்பூர் ஆயுதப்படை – முதன் முறையாக புதிய திட்டம்

சிங்கப்பூரில் தேசிய சேவைக்கு வருபவர்களுக்கு ஆயுதப்படையினர் தடுப்பூசி போடும் திட்டம் துவங்கப்பட உள்ளது.

கொரோனா தொற்று தொடரும் நிலையில் பரிசோதனை செய்யும் பணி, குழுக்களாக பிரிந்து செயல்படுதல் ஆகியவற்றுடன் இணைத்து இனி தடுப்பூசி போடும் பணியையும் ஆயுதப்படை செய்யவிருக்கிறது.

சிங்கப்பூர் ஆயுதப்படை அதிகாரிகளில் சுமார் 83 சதவீதம் அதிகாரிகள் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்கள். இதனை 95 சதவீதமாக மாற்றும் இலக்கோடு செயல்பட்டு வருகிறோம் என்று தற்காப்பு துறை அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தேசத்திற்கான இந்த சேவையை செய்ய துவங்கவுள்ள அதிகாரிகளில் 90 சதவீதம் பேர் தங்களது முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.

ஆயுதப்படையினர் தேசிய சேவை செய்ய வரவிருக்கும் நபர்களுக்கு தடுப்பூசி போடுவது இதுவே முதன்முறை. இனி இந்த வழக்கம் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்றும் ஆயுதப்படையின் வெளிநாட்டு பயிற்சி மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் இங் எங் ஹென் கூறியுள்ளார்.

Related posts