TamilSaaga

சர்வதேச பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பினை வெளியிட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்… பயணம் செய்யும் முன் இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

சர்வதேச பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கான முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம். அதாவது பயணம் செய்யும் பொழுது, பயணிகளுக்கு வழங்கப்படும் இலவச உணவுகள் இனிமேல் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் உணவுகளுக்கு ஆர்டர் செய்ய விரும்பினால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இன் இணையதளம் மூலம் 24 மணி நேரங்களுக்கு முன்பு வரை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு தேவையான அனைத்து நாடுகளின் கலாச்சார உணவுகளும் உணவு பட்டியலில் இடம்பெறும் என்றும், அவை நிபுணத்துவம் வாய்ந்த சமையல் கலைஞர்களால் செய்யப்பட்டு பரிமாறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பையன்களுக்கு தேவையான நொறுக்கு தீனிகள் முதல் அனைத்து வகையான உணவுகளையும் நீங்கள் முன்கூட்டியே ஆர்டர் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

மேலும் சைவ உணவுகள், அசைவ உணவுகள், முட்டை மற்றும் சாப்பிட்டுபவர்களுக்கான உணவுகள், ஜெயின் உணவுகள், வீகன் உணவுகள் போன்ற அனைத்து வகையான உணவுகளும் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts