SINGAPORE: MOM-ன் சமீபத்திய அறிவிப்பின்படி, VTL மூலம் சிங்கப்பூருக்குள் நுழையும் தகுதியுள்ள பாஸ் வைத்திருப்பவர்கள் நுழைவு அனுமதிக்கு (Entry Approval) இனி விண்ணப்பிக்கத் தேவையில்லை. கடந்த (பிப்.21) நள்ளிரவு 11:59 மணியோடு அந்த விதிமுறை அதிகாரப்பூர்வமாக விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்த புதிய நடவடிக்கை மூலம், வேலைவாய்ப்பு பாஸ், Dependent அல்லது எஸ் பாஸ் போன்ற நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் இனி Entry Approval இல்லாமல் சிங்கப்பூருக்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டது.
Work Permit Holders தவிர முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட Long Term Pass holders அதாவது EP எனப்படும் Employment Pass, Dependent’s pass அல்லது S Pass வைத்திருப்பவர்கள் மட்டும் நுழைவு அனுமதியின்றி சிங்கப்பூருக்குள் வர முடியும் என்று MOM கூறியது.
எனினும், பிப்.22 முதல் எந்த விமான நிறுவனங்களும் இதற்கான பயணத்தை தொடங்கவில்லை. சிங்கப்பூர் செல்ல விரும்பியவர்கள் தாங்களாகவே இணையதளங்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தனர். ஆனால், விமான நிறுவனங்கள் இந்த விவகாரத்தில் மவுனம் சாதித்தன.
இந்நிலையில், தமிழ் சாகா சிங்கப்பூர் சார்பாக Air India Express நிறுவன அதிகாரிகளிடம் பேசினோம். அதில், “S Pass, EP, Long term pass holders திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு Entry Approval இல்லாமல் பயணிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் பயணிக்க விரும்புவோர் Air India Express-ல் இதற்கான டிக்கெட்டுகளை இனி புக்கிங் செய்யலாம் என்றும் 2 தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்கள் சிங்கப்பூர் பயணிக்கலாம்” என்றும் கூறியுள்ளனர்.
தமிழ் சாகா சிங்கப்பூர் தளத்துக்கு Air India Express நிறுவன அதிகாரிகள் பிரத்யேகமாக இந்த தகவலை தெரிவித்துள்ளனர். ஆகவே, பயணிகள் இனி எந்தவித யோசனையுமின்றி, entry approval இல்லாமல் சிங்கப்பூர் பயணிக்கலாம். ஆனால், மீண்டும் சொல்கிறோம், “S Pass, EP, Long term pass holders” வைத்திருப்பவர்கள் மட்டுமே entry approval இல்லாமல் சிங்கப்பூர் வர MOM அனுமதி கொடுத்துள்ளது.
மீண்டும் MOM அனுமதி அளிக்கும் வரை, Work Permit Holders-களால் சிங்கப்பூர் வர முடியாது. எனினும், கூடிய விரைவில் அவர்களுக்கான கதவுகளும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும், தமிழ் சாகா சார்பில் Indigo நிறுவனத்திடமும் பேசினோம். ஆனால், அதன் அதிகாரிகள், “எங்களுக்கு இதுவரை டிக்கெட் முன்பதிவு செய்ய எந்த அனுமதியும் கொடுக்கப்படவில்லை” என்று தெரிவித்துவிட்டனர்.
Source: Nandana Travels, Trichy