TamilSaaga

900,000 வேலை வாய்ப்புகள்… “Work Pemit” விரைவாக பெற 85 மில்லியன் டாலர்கள்.. காலரை தூக்கிவிடும் “கனடா” – மனது வைக்குமா சிங்கப்பூர்?

கனடா மெல்ல மெல்ல அதன் பெருகிவரும் immigration விண்ணப்பங்களின் பின்னடைவை நீக்கத் தொடங்கி, பணி அனுமதிகளுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

Citizenship மற்றும் Immigration-கான நிலைக்குழு உடனான சமீபத்திய கூட்டத்தில், கனடாவின் Immigration அமைச்சர் சீன் ஃப்ரேசர், “Work Permits-களுக்கான செயலாக்க நேரத்தை மேம்படுத்தும் முயற்சியில் அரசு தீவிரமாக உள்ளது. அதன்படி, Immigration, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (ஐஆர்சிசி) சார்ந்து தேங்கிக் கிடக்கும் பணிகள், $85 மில்லியன் பட்ஜெட் ஒதுக்கீடு மூலம் விரைவில் வேகமெடுக்கும்” என்று தெரிவித்தார்

பணி அனுமதி, படிப்பு அனுமதி, குடியுரிமைச் சான்று மற்றும் permanent residence card renewals ஆகியவற்றுக்கான சேவைத் தரநிலைகள் 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று ஃப்ரேசர் முன்பு அறிவித்திருந்தார்.

மேலும் படிக்க – “என் மார்பு சின்னதா இருந்தா உனக்கு என்ன?” – கமெண்ட் செய்தவர்களை வெளுத்துவிட்ட சிங்கப்பூர் யூடியூப் பிரபலம்

கனடாவிற்கு வெளியே சமர்ப்பிக்கப்பட்ட பணி அனுமதிகளுக்கான நிலையான செயலாக்க நேரம் 60 நாட்கள் ஆகும். International Experience Canada (IEC) பணி அனுமதிகள் பெற 56 நாட்கள் ஆகும். கனடாவில் சமர்ப்பிக்கப்பட்ட பணி அனுமதி நீட்டிப்புகள் செயலாக்கத்திற்கு 120 நாட்கள் வரை ஆகும்.

future citizens, நிரந்தர குடியிருப்பாளர்கள், சர்வதேச மாணவர்கள், தற்காலிக பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் ஆகியோரின் விண்ணப்பங்கள் எண்ணிக்கை 1.8 மில்லியனை எட்டிய நேரத்தில் இந்த $85 மில்லியன் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 1 நிலவரப்படி, IRCC 85,000 க்கும் மேற்பட்ட பணி அனுமதி விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.

கனடாவில் கடந்த நவம்பரில் ஏறக்குறைய 900,000 வேலை வாய்ப்புகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க – எல்லைகள் திறப்பு.. உச்சம் தொடும் “சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்” வருமானம்.. 126 மடங்கு எகிறிய “Scoot” வளர்ச்சி – இந்தியர்களே காரணம்!

அதேபோல், நமது சிங்கப்பூரில் விரைவில் Work Permit Holders-களும் Entry Approval இன்றி மண்ணில் நுழைய அனுமதிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான இந்திய தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சிங்கப்பூர் அரசின் புதிய அறிவிப்பின் மூலம், பிப்ரவரி 22 முதல் VTL மூலம் சிங்கப்பூருக்குள் நுழையும் தகுதியுள்ள பாஸ் வைத்திருப்பவர்கள் நுழைவு அனுமதிக்கு (Entry Approval) இனி விண்ணப்பிக்கத் தேவையில்லை. பிப்.21 நள்ளிரவு 11:59 மணியோடு அந்த விதிமுறை அதிகாரப்பூர்வமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த புதிய நடவடிக்கை மூலம், வேலைவாய்ப்பு பாஸ், Dependent அல்லது எஸ் பாஸ் போன்ற நீண்ட கால பாஸ் வைத்திருப்பவர்கள் இனி Entry Approval இல்லாமல் சிங்கப்பூருக்கு வரலாம். ஆனால், Work Permit Holders அப்படி சிங்கப்பூர் வர முடியாது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts