TamilSaaga

‘இந்திய, மலாய் மாணவர்களுக்கு அதிக உதவி வழங்கப்பட்டது’ – சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம்

சிங்கப்பூரைச் சேர்ந்த சமய அமைப்புகள் எப்பொழுதுமே இனம் மற்றும் சமுதாயத்தை தாண்டி சேவையாற்ற வேண்டும் என்று சட்ட உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார். அந்த வகையில் Singapore Buddhist Lodge நிறுவனம் சமயங்களுக்கு இடையே நல்வழியில் தொடர்புகளை ஏற்படுத்தி வருவதாக சண்முகம் கூறினார்.

மேலும் அந்நிறுவனத்தின் புதிய இயக்குனர் குழுமம், சமுதாய அறக்கட்டளை மற்றும் கல்வி அறக்கட்டளை ஆகியவற்றை நேற்று திரு. சண்முகம் அவர்கள் திறந்து வைத்தார். தேவை உள்ளவர்களை அடையாளம் கண்டு அந்நிறுவனம் மற்ற சமய அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிறுவனம் கடந்த ஆண்டு வழங்கிய தொடக்கநிலை மற்றும் உயர்நிலை கல்வி உதவிகள் பாதிக்கும் மேற்பட்டவை மலாய் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அறக்கொடை என்பது இனம் மற்றும் சமயம் சார்ந்தது அல்ல என்றும் கூறினார்.

Related posts