TamilSaaga

டோக்கியோ பாராலிம்பிக் 2020 : இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர் சிங்கப்பூர் “தங்க மங்கை” யிப் பின் சியு

டோக்கியோ நகரில் நடந்த வரும் பாராலிம்பிக் போட்டிகளின் 50 மீ பேக்ஸ்ட்ரோக் S2 நிகழ்வில், நமது சிங்கப்பூர் நீச்சல் வீராங்கனை யிப் பின் சியு இன்று வியாழக்கிழமை (செப்டம்பர் 2) நடக்கவிருக்கும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஆகையால் முன்னதாக ரியோவில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் அவர் வென்ற தங்கப் பதக்கத்தை மீண்டும் பெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

டோக்யோ அக்வாடிக் சென்டரில் நடந்த போட்டியில் அவர் பந்தய தூரத்தை 1: 03.61 என்ற நேரத்தில் கடந்து முதல் இடத்தைப் பிடித்தார். மேலும் இந்த நிகழ்வின் தற்போதைய உலக சாம்பியன் யிப் பின் சியு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

29 வயதான நமது சிங்கப்பூர் வீராங்கனை, ஜப்பானின் மிகுய் யமடாவை விட கிட்டத்தட்ட ஆறு வினாடிகள் முன்னதாக பயணத்தூரத்தை கடந்து தகுதிபெற்று, இன்று வியாழக்கிழமை மாலை நடக்கும் இறுதிப் போட்டிக்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற வாரம் நடந்த போட்டியில் யிப் பின் சியு தங்கம் வென்றார் என்பதும் நினைவுகூரத்தக்கது. 17 செப்டம்பர் 2018ல், யிப் சிங்கப்பூரில் நியமன நாடாளுமன்ற உறுப்பினரானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் தனது பதவிக்காலத்தை சத்தியப்பிரமாணம் செய்து 1 அக்டோபர் 2018 அன்று தொடங்கினர். மேலும் 23 ஜூன் 2020 அன்று அவர் பதிவு காலம் முடிந்தது.

Related posts