TamilSaaga

“சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மது பாட்டில்கள்” – கையும் களவுமாக சிக்கிய இருவர் கைது

சிங்கப்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 6) சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மதுபாட்டில்கள் மற்றும் நிலவொளி உற்பத்தி நிலையத்தை சிங்கப்பூர் சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் இந்த நிகழ்வின்போது இருவர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ஒரு ஊடக அறிக்கையில், சிங்கப்பூர் சுங்க அதிகாரிகள் 670க்கும் மேற்பட்ட பாட்டில்கள், 30 ஜெர்ரி கேன்கள் மற்றும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட இரண்டு மதுபாட்டில்களை கைப்பற்றியதாக கூறியது. ஆகஸ்ட் 6ம் தேதி காலை, கிடைத்த தகவலின் அடிப்படையில், பெடோக் நார்த் ஸ்ட்ரீட் அருகே உள்ள கார் பார்க்கிங்கில் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட காரை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இந்நிலையில் அந்த காரில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 60 பாட்டில் மதுபானங்களையும், மேலும் அந்த கார் ஓட்டி வந்த டிரைவர் வீட்டில் மேலும் 300 பாட்டில்களையும் கண்டுபிடித்தனர். இதனையடுத்து 42 வயதான சீன நாட்டவரான அந்த டிரைவர் கைது செய்யப்பட்டார். மேற்கொண்டு இந்த நிகழ்வு குறித்து விசாரணை நடந்து வருகின்றது.

சிங்கப்பூரை பொறுத்தவரை Duty செலுத்தப்படாத பொருட்களை வாங்குவது, விற்பது, அனுப்புவது, வழங்குவது, சேமிப்பது, வைத்திருப்பது அல்லது கையாள்வது போன்ற குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அப்பொருளின் மதிப்பைவிட 40 மடங்கு வரி மற்றும் ஜிஎஸ்டியைத் தவிர்த்து, ஆறு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts