TamilSaaga

பிரான்சில் கள்ளச்சந்தையில் சுகாதார பாஸ்.. சிக்கினால் சிறை தண்டனை – அதிகாரிகள் அறிவிப்பு

பிரான்சில் கள்ளச் சந்தையில் சுகாதார பாஸ்களை விற்பது தெரியவந்துள்ளது. தடுப்பூசிக்கு எதிரான மக்கள் நூற்றுக்கணக்கான யூரோக்கள் செலவு செய்து போலியாக விற்கப்படும் சுகாதார பாஸ்களை வாங்குக்கிறார்கள் என தெரியவந்துள்ளது.

உணவகங்கள் ரயில் மற்றும் பொது இடங்களில் சுகாதார பாஸ் கட்டாயம் என பிரான்ஸ் அறிவித்தது , இதனை அடுத்து தற்போது ஆன்லைன் கள்ளச்சந்தையில் போலி சுகாதார பாஸ் விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்த சுகாதார பாஸ் என்பது முழுமையாக தடுப்பூசி பெற்றவர் மற்றும் கொரோனா இல்லாதவர் என்பதை காட்டும் ஓர் ஆவணமாக பயன்படுகிறது.

இந்த ஆவணத்துக்கு ஒரு தரப்பு மக்கள் ஆதரவு தெரிவித்தாலும் மருபுறம் தடுப்பூசிக்கு எதிராக ஐந்து வாரங்களாக பிரான்சு முழுதும் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்களையும் காணமுடிகிறது.

தடுப்பூசியை எதிர்த்து போராடும் மக்கள் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சிலர் போலி சுகாதார பாஸ்களை கள்ளச்சந்தையில் விற்கிறார்கள். 140 முதல் 350 யூரோக்கள் வரை பணம் வசூலிக்கப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

போலி சுகாதார பாஸ் தயாரிப்பவர்களுக்கு5 ஆண்டுகள் வரை சிறை மற்றும் 150,000 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. போலி சுகாதார பாஸ் வாங்குபவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை போலி சுகாதார பாஸ் விற்பனை மீதான பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts