TamilSaaga

சிங்கப்பூர் MRT.. முகமூடி இல்லாத பயணிகளை கவனிக்க “புதிய வழி” – 5 MRT நிலையங்களில் அமைக்கப்படும்

சிங்கப்பூரில் பொது போக்குவரத்து ஆபரேட்டர் SBS டிரான்ஸிட் பயன்படுத்தும் வீடியோ பகுப்பாய்வு அமைப்பு மூலம், இனி கவனிக்கப்படாத சாமான்கள் மற்றும் முகமூடி இல்லாத பயணிகளை விரைவில் தானாகவே கண்டறிய முடியும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த அமைப்பு இந்த ஆண்டின் பிற்பகுதியில், வடகிழக்கு பாதை வழியாக ஐந்து MRT பரிமாற்ற நிலையங்களான அவுட்ராம் பார்க், சைனாடவுன், டோபி காட், லிட்டில் இந்தியா மற்றும் செராங்கூன் ஆகிய பகுதிகளில் அமைக்கப்படும்.

மேலும் இது அடுத்த ஆண்டுக்குள் டவுன்டவுன் லைனில் உள்ள பரிமாற்ற நிலையங்களில் இது பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. SBS டிரான்சிட் தற்போதுள்ள க்ளோஸ்-சர்க்யூட் தொலைக்காட்சி (சிசிடிவி) நெட்வொர்க்கிலிருந்து காட்சிகளை பகுப்பாய்வு செய்யும் அமைப்பு, கடந்த 1½ ஆண்டுகளாக பிரெஞ்சு நிறுவனமான தேல்ஸால் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் SBS டிரான்ஸிட் மூத்த துணைத் தலைவர் ஜெஃப்ரி சிம், கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 3) ஊடக சந்திப்பின்போது “எங்கள் முழு அடிப்படை குறிக்கோள் உண்மையில் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதோடு அவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதாகும்” என்றார்.

அதேசமயம் இந்த அமைப்பு ஸ்டேஷன் ஊழியர்களை மாற்றாது, மாறாக “மேலும் ஒரு இயக்குநராக” செயல்படும் என்று SIM டிரான்சிட்டின் வட-கிழக்கு லைன்/செங்காங்-புங்கோல் LRTன் தலைவரும் ரயில் மேம்பாட்டுத் தலைவருமான திரு. சிம் கூறினார்.

Related posts