சிங்கப்பூரில் நீங்கள் நுழைவு நிலை கழிவு சேகரிப்பு துறையில் பணிபுரிந்து தருபவராக இருந்தால், வரும் 2028ம் ஆண்டுக்குள் நீங்கள் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரக் குடியுரிமை பெற்ற குடிமக்களாக இருக்கும்பாட்சியத்தில் உங்கள் மாதாந்திர அடிப்படைச் சம்பளம் S$3,260 வரை உயரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூரில் கழிவு மேலாண்மைத் தொழிலுக்கான முத்தரப்புக் குழுவின் (TCWM) பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதை அடுத்து, மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் தேசிய சுற்றுச்சூழல் முகமை (NEA) நேற்று திங்கள்கிழமை அன்று (ஜனவரி 24) இந்த தகவலை தெரிவித்தது. .
சிங்கப்பூரில் கழிவு மேலாண்மை துறையில் உள்ள சுமார் 3,000 சிங்கப்பூர் மற்றும் நிரந்தர குடியுரிமை தொழிலாளர்கள் இந்த புதிய முற்போக்கான ஊதிய மாதிரியால் பயனடைய உள்ளனர் என்று MOM மற்றும் NEA வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த மாதிரியின் கீழ், சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரக் குடியிருப்பாளர்களான நுழைவு நிலை கழிவு சேகரிப்புத் தொழிலாளர்களுக்கான அடிப்படை ஊதியம் ஜூலை 2023ல் S$2,210-லிருந்து அதிகரிக்கப்பட உள்ளது. அதன்பின், 2028ம் ஆண்டு வரை S$3,260 வெள்ளி என்ற அளவை எட்டும் வரை ஊதிய தொகை ஒவ்வொரு ஆண்டும் S$210 ஆக அதிகரிக்கும்.
அதே வரிசையில், கழிவு சேகரிப்புத் துறையில் மூத்த ஓட்டுநர்களுக்கான அடிப்படை ஊதியம் 2023ல் S$2,910லிருந்து அது 2028க்குள் S$3,960 ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது “எங்கள் குறைந்த ஊதியத் தொழிலாளர்கள் அர்த்தமுள்ள மற்றும் நிலையான ஊதிய வளர்ச்சியைக் கொண்டிருப்பதை உறுதி செய்யும்” என்று சிங்கப்பூரில் சூதாட்டத்தில் இழந்த சம்பள பணம்.. Dormitory அருகில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை! – வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான எச்சரிக்கை பதிவு!
மேலும் அடிப்படை ஊதிய உயர்வு மட்டுமல்லாமல் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரக் குடியுரிமை பெற்ற தகுதியுள்ள கழிவு மேலாண்மைத் தொழிலாளர்களுக்கு கட்டாய வருடாந்திர போனஸையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 2024 முதல் நடைமுறைக்கு வரும் இந்த திட்டத்தின் கீழ், தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது தங்கள் முதலாளிகளுடன் பணிபுரிந்திருந்தால், குறைந்தபட்சம் ஒரு மாத ஊதியத்தை வருடாந்திர போனஸாகப் பெற வேண்டும். இந்த போனஸ் அவர்களின் பணி செயல்திறனுடன் இணைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
“இது முதலாளிகள் கழிவு மேலாண்மை தொழிலாளர்களை சிறப்பாக ஈர்க்கவும் தக்கவைக்கவும் உதவும், மேலும் உற்பத்தித்திறனை அதிகரிக்க அவர்களின் தொழிலாளர்களின் பயிற்சியில் முதலீடு செய்வதற்கான அவர்களின் முயற்சிகளை நிறைவு செய்யும்” என்று