TamilSaaga

குடும்பம் காக்க சிங்கப்பூர் வந்த “தமிழக தொழிலாளி” : பணியிட விபத்தில் பறிபோன கால் – சிங்கப்பூர் கைவிடவில்லை

கீழ்காணும் இந்த செய்தி give.asia என்ற இணையதளத்தில் வெளியான செய்தி. தமிழக தொழிலாளி ஒருவருக்காக அவர்கள் நிதி திரட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : “48 சதவிகிதம் ஊதிய உயர்வு” – சிங்கப்பூரில் நீங்கள் “இந்த” துறையில் வேலை செய்தால்? MOM உங்களுக்கு தரும் “Good News” இதுதான்

ஏழ்மை போக்கத்தான் பல தொழிலாளர்கள் உலகின் பல பகுதிகளில் இருந்து சிங்கப்பூர் வருகின்றனர். தங்களால் இயன்ற வேலைகளை செய்து அதன் மூலம் ஈட்டும் பணத்தை அவர்கள் தங்கள் உறவுகளுக்கு அனுப்பி வருகின்றனர். ஆனால் சில சமயங்களில் அவர்களின் அந்த வெளிநாட்டு வாழ்க்கை அவர்களுக்கு சில சிரமங்களை அழித்துவிடுகிறது. இதே நிலை தான் தற்போது வினோத்துக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒரு ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர் தான் அன்புகிருஷ்ணன் வினோத். தனது பெற்றோர் மற்றும் தனது மூத்த சகோதரிக்கு சிறந்த வாழ்க்கையை அமைத்துத்தர அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 2021ல் இங்கு வேலை வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 3 டிசம்பர் 2021 அன்று, லிஃப்டிங் கொக்கி மற்றும் லிஃப்டிங் கியர் பொருத்தப்பட்ட இயந்திரத்தை பயன்படுத்தி லாரியில் இருந்து 5 ஸ்டீல் தகடுகளை இறக்குமாறு திட்ட மேற்பார்வையாளர் தனது குழுவிற்கு அறிவுறுத்தினார். அவர்களும் 4 எஃகு தகடுகளை இயந்திரம் மூலம் பாதுகாப்பாகவும், எந்த பிரச்சனையும் இல்லாமல் இறக்கினர். இருப்பினும், கடைசியாக எஞ்சியிருந்த தகடு எடுக்கமுடியாது நிலையில் இருந்த நிலையில் அதை எடுக்க வேறு வழிகள் கையாளப்பட்டது. அப்போது பாதுகாப்பு உபகரணங்களை முறையாக வினோத் போட்டிருந்த நிலையிலும் அது அவர் கால் மீது விழுந்தது.

வினோத் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், மருத்துவர்கள் உடனடியாக அவரது காயங்களை அணுகி வினோத்துக்கு பல அறுவை சிகிச்சைகளை நடத்தினர். இருப்பினும், காயமடைந்த அவரது காலில் தொற்று ஏற்பட்டு மேல்நோக்கி பரவத் தொடங்கியது, மேலும் அவரது உயிரையும் அவரது முழு உடலையும் காப்பாற்ற, காலை துண்டிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று டாக்டர்கள் கூற, உரிய அனுமதியோடு அவரது கால்கள் எடுக்கப்பட்டது. தற்போது, ​​வினோத் இன்னும் மருத்துவமனையில் தான் இருக்கிறார், மேலும் அவரது மருத்துவ பில் $1,14,000ஐத் தாண்டியுள்ளது, மேலும் வினோத் குணமடைய ஒரு மறுவாழ்வு மையத்திற்கு மாற்றப்பட வேண்டும், இதற்கு கூடுதலாக $50,000 செலவாகும்.

பணியாளர் இழப்பீடு தொகை $45,000 என்பதில் சந்தேகமில்லை, ஆனால் வினோத் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு காப்பீட்டு நிறுவனத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். அவர் வேலை செய்த நிறுவனம் வினோத்துக்கு உதவுவதற்காக தங்களால் இயன்ற அனைத்தையும் செய்தது, மேலும் வினோத்துக்கு செயற்கைக் கால் வைத்து உதவவும், அவரது வேலைக்காக அவருக்கு எளிமையான கடமைகளை வழங்கவும் அவர்கள் பரிசீலித்து வருகின்றனர், இதனால் வினோத் சிங்கப்பூரில் தங்கி வேலை செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் சூதாட்டத்தில் இழந்த சம்பள பணம்.. Dormitory அருகில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை! – வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான எச்சரிக்கை பதிவு!

வினோத்துக்கு தற்போது வயது 24, அவருக்கு மருத்துவச் செலவுகளுக்கு உதவி தேவை, அதனால் அவர் தனது வாழ்க்கையைத் தொடரலாம். வினோத்தின் மருத்துவக் கட்டணங்கள் மற்றும் மறுவாழ்வுக் கட்டணங்களுக்காக திரட்டப்படும் நிதி நேரடியாக மருத்துவமனைக்குச் செலுத்தப்படும். GIVE ASIA என்ற தொண்டு நிறுவனம் இவருக்கு தற்போது மக்கள் தரும் கொண்டு உதவிகளை செய்து மக்கள் வருகின்றது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts