TamilSaaga

ஏமாற்றி ஊருக்கு வர வைத்த பெற்றோர்… காதலை விட்டுக் கொடுத்து சிங்கப்பூரை விட்டே வெளியேறிய “வலிமை” பெண் – இந்த நொடி வரை தேடும் வெளிநாட்டு ஊழியர்

சிங்கப்பூர்… இந்த பெயர் தன்னுள் பல இரகசியங்களை, உண்மைகளை, வெளிச்சங்களை ஒளித்து வைத்திருக்கும் நாடு. அப்படிப்பட்ட சிங்கப்பூரில் உன்னதமான பெண்கள் தினமான இன்று (மார்ச்.8) இந்த கட்டுரையை உங்களுக்கு தருவதில் சற்று மகிழ்ச்சி அடைகிறோம்.

இதுகுறித்து கதையின் நாயகன் கதிர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நமது ‘தமிழ் சாகா Exclusive’ குழுவினருக்கு மனம் விட்டு பேசியுள்ளார். இனி எல்லாம் அவரது வார்த்தைகளாக..

“ஹாய்.. Happy to meet you people. யாரிடமும் என்னோட பெர்சனல் விஷயம் பகிர்ந்துக்க விரும்ப மாட்டேன். ஆனால், பெண்கள் தினத்துல இதை உங்க மூலமா பேசுறதுல சந்தோஷம் தான். அவசியம்-னு நினைக்குறேன். நான் கதிர். சொந்த ஊர் திருச்சி. அப்பா Bank Staff. அம்மா Teacher. Upper Middle Class Family-னு சொல்லலாம். நான் Software-ல MS பண்ணிருக்கேன். படிச்சு முடிச்ச உடனேயே நல்ல நல்ல Job Offers வந்துச்சு. அதுல ஒரு Offer சிங்கப்பூர்-ல இருந்து வந்துச்சு. சத்தியமா, இந்த நாடு என் வாழ்க்கை-ல மிகப்பெரிய Role Play பண்ண போகுதுனு நான் அப்போ எதிர்பார்க்கல.

சக பெண் ஊழியரை பின்னால் தட்டிவிட்டு “கூலாக பதில்” சொன்ன Flight Attendant – அதைவிட கூலாக “தலையில் தட்டி” உள்ளே போட்ட சிங்கப்பூர் நீதிமன்றம்

எனக்கு Chennai-ல Work பண்ணனும்-னு ஆசை. ஏன்னா.. என் Friends, Seniors எல்லாருமே சென்னை-ல தான் இருந்தாங்க. ஸோ, அதுனால சிங்கப்பூர் வேலையை நான் பெருசா எடுத்துக்கல. சென்னையில உள்ள ஒரு கம்பெனியில் இருந்த வந்த வேலையை தேர்வு செய்தேன். ஒன்றரை வருஷம் போச்சு. அப்போ திடீர்-னு ஒருநாள், மீண்டும் அதே சிங்கப்பூர் கம்பெனியில் இருந்து எனக்கு ஆஃபர் வந்துச்சு. அப்பாகிட்ட சொன்னேன்… ‘மீண்டும் மீண்டும் உன்னைத் தேடி வருது-டா.. சிங்கப்பூர்-ல PR வாங்கினா நல்லா செட்டில் ஆகிடலாம். ட்ரை பண்ணிப் பாரு’-னு சொன்னாரு. அதே கம்பெனிக்கு ‘Yes Accepted’-னு reply பண்ணேன். அடுத்த மூணு மாசத்துல கிளம்பிட்டேன்.

சிங்கப்பூர் வந்திறங்கி கம்பெனியில் ஜாயிண்ட் பண்ணி, எல்லாம் நல்லா போனுச்சு. அப்போ தான் என் தேவதையை பார்த்தேன். சிங்கப்பூர் பெண். அவங்க பெயரை சொல்ல விரும்பல. உங்களுக்கு சொன்னாலும் புரியாது. ஆக்ச்சுவலா அவங்க ஒரு சைனீஸ். But சிங்கப்பூருல செட்டில் ஆக்கிட்டாங்க. ரெண்டு பேரும் ஒரே கம்பெனியில ஒர்க் பண்ணோம். ஒரே டீமுல இருந்தோம்.

வெறும் முப்பதே நிமிடம்… வெள்ள நீர் முழுவதும் வடிந்த அற்புதம்… இதுதான் உலகமே வியக்கும் சிங்கப்பூரின் “தனித்துவம்”

ஆனா, என்னையே அறியாம அவங்கள விரும்ப ஆரம்பிச்சேன். அவங்க Office வராத நாட்களை என்னால நகர்த்த முடியல. ஒருநாள் அவங்ககிட்ட அவங்க பாஷையிலேயே காதலை சொல்லிட்டேன். முதல்ல மறுத்துட்டாங்க. “நாம நண்பர்களா இருப்பது தான் நல்லது”-னு சொன்னாங்க. சரி… காதலை சொல்லியும் அவங்க ஏத்துக்கலைனா இதுக்கு மேல அவங்களை Force பண்ணக்கூடாதுனு நானும் விட்டுட்டேன்.

ஒருநாள் எனக்கும், அவங்களுக்கும் பொதுவான ஒரு நண்பர் மூலமா தான், ‘என் காதலை ஏன் அவங்க ஏத்துக்கல-ங்குற உண்மை தெரிய வந்துச்சு. அவள் அந்த நண்பரிடம் சொன்ன காரணம் என்ன அசைச்சு பார்த்துடுச்சு. “என்னோட அப்பா, அம்மா சின்ன வயசுலயே விபத்துல இறந்துட்டாங்க. சிங்கப்பூருல இருந்த என் உறவினர் தான், என்னை தூக்கிட்டு வந்து வளர்த்தாங்க. என் உறவினரும் சிங்கப்பூருல ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழ்பவர் தான். அதனால், எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுலயே அவங்க வீட்டுல இருந்து வெளியேறி தனியா தங்க ஆரம்பிச்சுட்டேன். கதிர்-ரை பார்த்த பெரிய இடத்து வீட்டுப் பையன் மாதிரி தெரியுது. ஒரு வருஷமா எனக்கு அவனை நல்லா தெரியும். எனக்கும் அவனைப் பிடிக்கும். ‘I love you’-னு என்னட்ட சொன்னப்போ, கட்டிப்பிடிக்கணும்-னு தோணிச்சு. ஏன்னா.. என்னை நேசிக்கும் ஒரு இதயத்துக்காக, உறவுக்காக நான் 20 வருஷமா ஏங்கியிருக்கேன்.

ஆனா, அவனோட குடும்ப சூழல் வேற. முதல்ல அவன் ஒரு இந்தியன். ரெண்டாவது தென்னிந்தியாவுல இருந்து வந்திருக்கான். அங்க குடும்ப உறவுகளுக்கு அதிகமா முக்கியத்துவம் கொடுப்பாங்க-னு கேள்விப்பட்டிருக்கேன். அப்படிப்பட்ட இடத்துல இருந்து வந்த ஒரு பையனை என்னோட சுயநலத்துக்காக நான் கல்யாணம் பண்ணிக்க விரும்பல. ஒருவேளை அவனோட வீட்டுல என்னை ஏத்துக்கலைனா, அவன் மனசு ரொம்ப கஷ்டப்படும். அது அவனுக்கு வேதனை.. அவன் பெற்றோருக்கும் வேதனை.. எனக்கும் வேதனை. நான் கடைசி வரைக்கும் இப்படி தனியாவே இருந்து வாழ்ந்துக்குறேன்.. எனக்கு இது பழகிடுச்சு. ஆனால், அவனை நான் அவன் குடும்பத்தை விட்டு பிரிக்க மாட்டேன். அதனாலதான், அவனோட காதலை நான் ஏத்துக்கல” என்று சொல்லியிருக்கா.

என் நண்பர் என்னிடம் இதை சொன்னதும் நான் அப்படியே உட்கார்ந்துட்டேன். ஒரு வயசு வேகத்துல, அவளோட அழகுல தான் நான் அவளை காதலிச்சேன். ஆனால், அவங்க மனசு எப்படி இருந்திருக்கு பாருங்க.. அவங்களால என் குடும்பத்துக்குள்ள எந்த பிரச்சனையும் வந்துடக் கூடாது-னு நினைக்கிறாங்க. இப்படிப்பட்ட பெண்ணை எவனாச்சும் மிஸ் பண்ணுவானா என்ன?

உடனே அப்பா – அம்மா கிட்ட ஃபோன் பண்ணி பேசினேன். அவங்க ஏத்துக்கல. ஒரு சீனாக்காரிய எப்படி என் வீட்டு மருமகளா ஏத்துக்க முடியும்-னு ‘நோ’ சொல்லிட்டாங்க. பதிலுக்கு நானும் விடாப்பிடியா ‘நீங்க ஒத்துக்கிட்டா தான் ஊருக்கு வருவேன்’னு விடாப்பிடியா சொல்லிட்டேன். என் அப்பா – அம்மாட்ட பேசினதை அவளிடம் சொன்னேன். ‘அதுக்கு அவள், ‘இப்படி ஏதாவது நடக்கும்-னு தான் நான் வேண்டாம்-னு சொன்னேன். இப்பவும் சொல்றேன்.. நீ ஊருக்கு போ.. வேற ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கோ. நான் உனக்கானவள் அல்ல”-னு சொன்னா. இப்படியே ஆறு மாசம் போச்சு.

ஒருநாள் திடீர்னு என் நண்பர்கள் எனக்கு ஃபோன் பண்ணி, என் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்-னு சொன்னாங்க. பதறியடிச்சு போனேன்.. (ம்ஹூம்.. இப்போ நினைச்சாலும் எவ்வளவு ஏமாளியா இருந்திருக்கேன்னு எனக்கே சிரிப்பா வரும்). போனா என் அப்பா நல்லா பேப்பர் படிச்சுக்கிட்டு இருந்தார். நான் பதறியடிச்சு ‘என்னப்பா ஆச்சு’?-னு கேட்க, ‘அவரோ.. தம்பி நீ வேலைப் பார்த்து கிழிச்சது போதும்.. உனக்கு பொண்ணு பார்த்திருக்கோம். இன்னும் 10 நாள்ல கல்யாணம்’ சொன்னார். தலையில இடி இறங்குனது மாதிரி இருந்துச்சு.

எவ்வளவோ கெஞ்சினேன்.. கால்ல விழுந்து கெஞ்சினேன். ‘அந்த பொண்ணு தான் வேணும்-னா எங்க மேல மண்ணெண்ணெய் ஊற்றி நீயே கொளுத்திடு. நல்லா கரிக்கட்டையா ஆனதுக்கு அப்புறம், அதை பார்த்து ரசிச்சிட்டு அந்த சீனாக்காரியை கல்யாணம் பண்ணிக்கோ’ என்றார்.

என்ன பண்றதுன்னே தெரியாம, சிங்கப்பூருல இருந்த என்னவளுக்கு போன் செய்தேன். ‘அவள் எதுவுமே பேசல.. அமைதியா இருந்தா.. ஆனா, அவ அழுகுறத என்னால உணர முடிஞ்சது. 2 நிமிட பேரமைதிக்கு பிறகு, வார்த்தைகளை விட்டா.. இப்பவும் அந்த வார்த்தைகள் என் மனசுல ஒலிச்சிக்கிட்டே இருக்கு.. ‘என் அப்பா அம்மா இறந்ததுக்கு அப்புறம், என் மேல இவ்வளவு அன்பு வச்சு.. எனக்காக ஏங்குற ஒரு உயிர் இருக்குறத நினைச்சாலே சந்தோஷமா இருக்கு. தனிமை-ங்குறது என்னோட சாபம். இனி இதை மாற்ற முடியாது. விவரம் தெரியாத பருவத்துல என்னோட அப்பா, அம்மாவை இழந்துட்டேன். இப்போ உன்னையும் இழக்க நான் தயாரா இல்ல. உன் அன்பான, பாசமான அப்பா, அம்மா சொல்ற பெண்ணை கல்யாணம் பண்ணி சந்தோஷமா இரு. எல்லா கவலையும் கொஞ்ச நாளைக்கு தான். காலம் நம்மை மாற்றிடும். இனி நீ நினைச்சாலும் என்கிட்ட பேச முடியாது. நான் எங்க இருக்குறேன்னும் உன்னால கண்டுபிடிக்க முடியாது. ஆனா, நீ வாழப் போற வாழ்க்கையை நான் உனக்கே தெரியாம பார்த்துக்கிட்டு இருப்பேன். நீ சிரிச்சா நானும் சிரிப்பேன்.. நீ சந்தோஷமா இருந்தா நானும் சந்தோஷமா இருப்பேன்.. நீ அழுதா நானும் அழுவேன். அதனால உன் வாழ்க்கையில சந்தோஷமா இருக்க பாரு. அப்போ நானும் சந்தோஷமா இருப்பேன்னு நினைச்சுக்கோ. நான் உன்னை கவனிச்சிக்கிட்டே இருப்பேன். என்னை தேட முயற்சி பண்ணாத’-னு சொல்லி ஃபோனை வச்சவ தான்” என்று சொன்ன கதிர் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர்.

சிங்கப்பூரில் ஜுலை 1 முதல் அமலாகும் தடை – வெளிநாட்டவர்கள் மற்றும் சிங்கப்பூரர்கள் கவனத்திற்கு!

இந்த நிமிடம் வரை அவளை என்னால கண்டுபிடிக்க முடியல.. அதுக்கு அப்புறம் ஆறு முறை சிங்கப்பூர் வந்துட்டேன். அவள் இருந்த இடம், நண்பர்கள்-னு எல்லார்ட்டயும் விசாரிச்சேன். அவள் உறவுக்கார நபரிடமும் கேட்டுட்டேன். யாருக்குமே அவள் எங்க இருக்கான்னு தெரியல. ‘இந்த நிமிஷம் வரை தேடுறேன் சார்’- என்று சொல்லும் போது, மீண்டும் கண்ணீர்.

ஆனா, அந்த அழுத்தக்காரியை நிச்சயம் கண்டுபிடிக்காம விட மாட்டேன். என் சந்தோசம் அவள் சந்தோஷம்-னு சொன்னாள்ல.. என் சந்தோஷம் அவளை தேடுறது தான் சார்” என்று முடித்தார்.

(குறிப்பு: அந்த பெண் கடைசியாக பேசிய பிறகு, கதிர் வீட்டில் பார்த்த அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அப்பெண்ணிடமும் தனது கதையை அவர் சொல்ல, இப்போது இருவரும் கணவன், மனைவியாக சேர்ந்து அப்பெண்ணை தேடி வருகின்றனர்)

Related posts