TamilSaaga

சிங்கப்பூரில் ஓர் ஆண்டில் புகைபிடிப்பவர் எண்ணிக்கை 10.1 சதவீதமாக குறைவு – மருத்துவர்கள் கருத்து என்ன?

சிங்கப்பூர் மக்களின் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கையை 10 சதவீதத்துக்கு கீழ் கொண்டுவர இலக்கு நிர்ணயக்கப்பட்டது.

அதன்படி 2019 ஆம் ஆண்டு 10.6 சதவீதமாக இருந்த புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 10.1 சதவீதமாக மாறியுள்ளது. 0.1 சதவீதத்தில் இலக்கை அடைய முடியா சூழல் ஏற்பட்டாலும் சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புகைபிடிப்த்தலால் ஏற்படும் உடல்நலக்குறைவு மற்றும் நோய்கள் காரணமாக 2000 க்கும் அதிகமானோர் ஆண்டுதோறும் இறக்கின்றனர்.

கொரோனா சூழல் காரணமாகவும், புகைப்பிடிப்பவர்கள் யாரும் அருகில் இல்லாத காரணத்தாலும் புகைபிடிப்பவர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

எனினும் பலர் மீண்டும் புகைபிடிக்க துவங்குகிறார்கள். காரணம் வீட்டிற்குள் புகைப்பிடிக்கலாம் என்றும் வேலை சார்ந்த மன உளைச்சல் காரணமாகவும் மீண்டும் புகைப்பிடிக்கிறார்கள்.

மருத்துவர்கள் இது தொடர்பாக கூறும் போது புகைபிடிக்கும் எண்ணம் வரும் போது பிடித்த சாக்லேட் அல்லது பிடித்தமான வீடியோ போன்றவற்றை பார்த்து மனதை மாற்றலாம் என அறிவுறித்தியுள்ளனர்.

Related posts