TamilSaaga

சிங்கப்பூரில் தடுப்பூசி மையங்கள் மூடல் – மூத்த துணை அமைச்சர் ஜனில் தகவல்

சிங்கப்பூரில் கொரோனா பெருந்தொற்று தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் மூடவிருப்பதாக சுகாதாரத் துறை மூத்த துணை அமைச்சர் ஜனில் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் இதுவரை 37 தடுப்பபூசி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன அதில் இப்போதைக்கு 4 நிலையங்கள் மூடப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் பல தடுப்பூசி நிலையங்கள் படிப்படியாக மூடப்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் தடுப்பூசிகளை வழங்கும் பொது சுகாதார தயார் நிலை மருந்தகங்கள் இதுவரை 76 உள்ளது என்றும் அவை மேலும் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி மையத்திற்கோ அல்லது மருந்தகங்களுக்கோ சென்று செலுத்திக்கொள்ள இயலாமல் இருப்பவர்களுக்காக நடமாடும் குழுக்கள் செயல்பட்டு வருவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரை சிங்கப்பூரில் 81 சதவீதம் மக்கள் தடுப்பூசையை பெற்றுள்ளனர். தடுப்பூசி திட்டத்தை முழுமையாக செய்து முடிப்பதன் மூலமே விரைவில் இயல்பு நிலையை நோக்கி செல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts