TamilSaaga

சிங்கப்பூர் – திருச்சி மற்றும் சென்னை.. பயணிகளுக்கு ஒரு “Good News” – Air India Express வெளியிட்ட சூப்பர் அப்டேட்

அண்டை நாடான இந்தியாவின் பல பகுதிகளுக்கு தற்போது வந்தே பாரத் திட்டத்தின் மூலம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் சிங்கப்பூரில் இருந்து அனுதினம் சென்று வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை Air bubble மற்றும் வந்தே பாரத் சேவைகளை தவிர பிற பன்னாட்டு விமான சேவைகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வெகு சில நாடுகளுக்கு பன்னாட்டு விமான சேவையை அளித்து வருகின்றது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிங்கப்பூர் முதல் தமிழகத்தின் திருச்சிக்கு மற்றும் தலைநகர் சென்னைக்கு செல்ல விமானங்கள் இல்லாமல் பெரிய அளவில் மக்கள் தவித்து வந்தனர். திருச்சி, சென்னை, கொச்சி உள்ளிட்ட பல இந்திய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டாலும் புக்கிங் தொடங்கிய சில மணி நேரங்களில் டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்து விடுகின்றன. இதனால் மக்கள் குறித்த நேரத்தில் தங்களுடைய அவசர தேவைக்காக சிங்கப்பூரில் இருந்து தாயகம் திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

தற்போது இதனையறிந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு மேலும் சில சிறப்பு விமானங்களை சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கும் சென்னைக்கு இயக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனையடுத்து இந்த அக்டோபர் மாதம் 18, 20, 22, 25, 27 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு.

அதேபோல அக்டோபர் மாதம் 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மூன்று சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளன. சிங்கப்பூர் நேரப்படி மாலை 7 மணிக்கு இங்கிருந்து புறப்படும் விமானம் திருச்சிக்கு இரவு 8.35 மணிக்கு சென்றடையும். அதேபோல சிங்கப்பூரில் இருந்து மதியம் 1.25 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 2.55 மணியளவில் சென்னை சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் வரும் இந்திய பயணிகள் தற்போது 48 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட பெருந்தொற்று நெகடிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். முன்பாக இது 72 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்டதாக இருந்தால் போதுமானது என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts