TamilSaaga

சிங்கப்பூரில் forklift விபத்தில் உயிரிழந்த தமிழக ஊழியர்… குடும்பத்துக்காக கடல் கடந்து உயிரை விட்ட சோகம் – கண்ணுறங்கு நண்பா!

சிங்கப்பூரின் Choa Chu Kang பகுதியில் உள்ள ஒரு Build-To-Order (BTO) திட்ட பணியிடத்தில் கடந்த (ஜூலை 7) forklift விபத்தில் ஒரு இந்திய கட்டுமானத் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிங்கப்பூர் மனிதவளத் துறை அமைச்சகம் (MOM) கூறுகையில், 571-யூனிட் கீட் ஹாங் வெர்ஜ் BTO Project அமைந்துள்ள கீட் ஹாங் லிங்கில் (Keat Hong Link) Site-ல் விபத்து ஏற்பட்டதாக குறிப்பிட்டது.

இந்நிலையில், அந்த forklift வாகனத்தின் பின்புற counterweight-ல் நின்று கொண்டு, பணியில் ஒரு பகுதியாக overhead beam-ல் மின் கேபிளை கட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த வாகனம் பின்னோக்கி நகர்ந்துவிட்டது. இதில், forklift-ன் Canopy மற்றும் beam-க்கு இடையில் அந்த ஊழியர் சிக்கினார்.

உயிரிழந்தது 35 வயதான இந்திய தொழிலாளர் என்பதும் உறுதி செய்யப்பட்டது. அந்த ஊழியர் பணியிடத்தில் forklift வாகனத்தின் பின்புறத்தில் இருந்த counterweight-ல் நின்றிருக்கிறார். அதாவது counterweight என்பது, சுமக்கப்படும் பொருட்களின் சரியான எடை விநியோகத்தைப் பாதுகாக்கவும், நிலைத்தன்மையை (CounterBalance) பராமரிக்கவும், வாகனம் சாய்வதைத் தடுக்கவும் மற்றும் வாகனத்தின் பாதுகாப்பு செயல்திறனை உறுதிப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.

சிங்கப்பூரின் Mega Engineering நிறுவனத்தின் தான் அந்த இந்திய ஊழியர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த விபத்து கவனக்குறைவால் ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்த நிலையில், மரணத்தை ஏற்படுத்தியதற்காக 24 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

விபத்து நடந்த பணியிடத்தின் முக்கிய ஒப்பந்ததாரரான Teambuild Engineering and Construction நிறுவனம் அங்கு அனைத்து பணிகளையும் நிறுத்த உத்தரவிட்டது. இந்த சம்பவத்தையும் சேர்த்து சிங்கப்பூரில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 29 ஊழியர்கள் பணியிட விபத்தில் சிக்கி இறந்துள்ளனர்.

மேலும் படிக்க – அவ்வளவு அடி வாங்கியும்… பொறுமையாக இருந்ததற்காக இன்று சிங்கப்பூர் மக்களே வாழ்த்தும் வெளிநாட்டு ஊழியர் “சுரேஷ் பெருமாள்” இவரே! சல்யூட்!

எனினும், இந்த நொடி வரை இறந்த அந்த ஊழியர் யார் என்பது குறித்த தகவல் எதுவும் இதுவே சிங்கப்பூர் அரசால் வெளியிடப்படவில்லை. சிங்கையின் மனிதவளத்துறை அமைச்சகம், அவரது விவரங்களை வெளியிடவில்லை. இந்திய ஊழியர் என்ற தகவல் மட்டும் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் இந்தியாவில் எந்த மாநிலத்துக்காரர்? என்ன பெயர்? என்ற எந்த விவரமும் கிடைக்கவில்லை. இதுகுறித்து நாம் சில முக்கிய நபர்களிடம் பேசுகையில், சிங்கப்பூரில் தொடர்ந்து அதிகரிக்கும் பணியிட விபத்துகளால் அரசு இந்த விவகாரத்தில் சற்று மௌனம் காக்கலாம். தேவையில்லாத விவாதங்கள் எழ அவர்கள் விரும்பவில்லை என்று கூறினர்.

எனினும், தமிழ் சாகா தளத்துக்கு கிடைத்த எக்ஸ்க்ளூஸிவ் தகவலின் படி, உயிரிழந்த ஊழியர் ஒரு தமிழர் என்பது உறுதியாகியுள்ளது. அதேபோல் அவரது புகைப்படமும் கிடைத்துள்ளது. தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்தைச் சேந்தவராக இருக்கலாம் என்பதும் முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

அதேசமயம், இறந்த ஊழியர் குறித்த முழு தகவல் உங்களில் யாருக்கெனும் தமிழ் சாகா சிங்கப்பூர் தளத்தின் +8269 418 418 என்ற whatsapp எண்ணுக்கு விவரங்களை பகிரலாம். அந்த ஊழியரின் குடும்பத்துக்கு உதவ தமிழ் சாகா குழு தயாராக உள்ளது. தக்க சமயத்தில் நீங்கள் செய்யும் உதவி அந்த ஊழியரின் குடும்பத்துக்கு பேருதவியாக அமையலாம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts