TamilSaaga

தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் இனி நடவடிக்கை தாறுமாறாக இருக்கும்… மொத்தமாக நிறுவனத்திற்கு 240000 வெள்ளி அபராதம் தீட்டிய சிங்கப்பூர் நீதிமன்றம்!

சிங்கப்பூரில் வேலை செய்யும் இடங்களில் நிலவும் பாதுகாப்பான தன்மையின் காரணமாக கடந்த சில மாதங்களாக பல ஊழியர்கள் உயிரிழந்த செய்தியை நாம் செய்தியாக படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதற்காகத்தான் சிங்கப்பூரின் மனிதவள அமைச்சகம் தொழிலாளர்களுக்காக புது அமைப்பினை தொடங்கி அதன் மூலம் வேலை இடங்களில் நிலவும் பாதுகாப்பற்ற தன்மையை பற்றி புகார் அளிக்கும் விதமாக தொழிலாளர்களை ஊக்குவித்து வருகின்றது.

மேலும், பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்காத நிறுவனங்களுக்கு அபராதங்கள் கடுமையாக்கப்படும் எனவும் எச்சரித்து இருந்தது. இப்பொழுது அதன் எதிரொலியாக பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஊழியரின் கால் துண்டிக்கப்பட்டதன் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு 240000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி போர்க் லிஃப்ட் இயந்திரம் வேலை செய்து கொண்டிருந்த பொழுது அதனை படமெடுப்பதற்காக தகவல் ஊழியர் சென்ற பொழுது, போர்க்லிப்ட் அவரது காலின் மீது மோதியதன் காரணமாக வலது காலின் முட்டிக்கு கீழே உள்ள பகுதியானது அகற்றப்பட்டது. எனவே சம்பந்தப்பட்ட நிறுவனம் வேலை இடங்களில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு தன்மையை உறுதி செய்யவில்லை என்பதை கணக்கில் கொண்டு தற்பொழுது நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் நிறுவனங்கள் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொள்ளும் என நம்பப்படுகின்றது

Related posts