சிங்கப்பூரின் TOTO லாட்டரியின் இந்த வருட கடைசி குலுக்கலில் முதல் பரிசை ஒருவரும், இரண்டாம் பரிசை 2 பேரும் தட்டி சென்றுள்ளனர்.
சிங்கப்பூரின் பிரபல லாட்டரியான TOTO வாரம் இருமுறை குலுக்கப்படுகிறது. முதல் 7 இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசுத்தொகை பிரித்து கொடுக்கப்படும். 2022ம் ஆண்டின் கடைசி குலுக்கல் நேற்று டிச.29ம் தேதி நடந்தது. இதில் முதல் பரிசு ஒருவருக்கு விழுந்திருக்கிறது. க்ரூப் 1 என்னும் முதல் பரிசாக $1,230,798 சிங்கப்பூர் டாலர் கிடைத்து இருக்கிறது.
இது இந்திய மதிப்பில் 7 கோடியாக மதிப்பிடப்படுகிறது. இதற்கு முந்தைய குலுக்கலில் முதல் பரிசு விழுந்ததால் இந்த வாரத்தில் முதல் பரிசுத்தொகை குறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது. Group 2 பரிசை இரண்டு நபர்கள் தட்டி சென்றுள்ளனர். இரண்டாவது பரிசான $129,558 சிங்கப்பூர் டாலர் இந்திய மதிப்பில் 1.3 லட்சமாக மதிப்பிடப்படுகிறது. மூன்றாவது பரிசாக Group 3 விழுந்திருக்கும் $1,246ஐ 143 பேர் பெறுகிறார்கள்.
Group 4ல் $305 சிங்கப்பூர் டாலரை 319 பேரும், Group 5ல் $50 சிங்கப்பூர் டாலரை 7,246 பேரும், Group 6ல் $25 சிங்கப்பூர் டாலரை 8,110 பேரும் பெறுகிறார்கள். Group 7ல் $10 சிங்கப்பூர் டாலர் 119,087 பேருக்கு கிடைத்துள்ளது. வெற்றி பெற்ற முதல் டிக்கெட் Balestier Khalsa புட்பால் க்ளப்பில் வாங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பரிசினை 2023ம் ஆண்டு ஜூன் 27 வரை யாரும் claim செய்யவில்லை என்றால் தொண்டு நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டு விடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வருட TOTO லாட்டரியில் முதல் பரிசு 2 அல்லது 3 வாரத்திற்கு ஒருமுறையும், சில தடவைகளில் தொடர்ச்சியாகவும் விழுந்தது. இதன் நிலவரம் அடுத்து வரும் வாரங்களில் பெரிய மாற்றம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.