TamilSaaga

சிங்கப்பூரில் மோட்டார் சைக்கிளில் பெண் தோழியுடன் சென்ற நபர் – “அனுபவமின்மையால்” ஏற்பட்ட சோகம்

சிங்கபரின் ஜூரோங் வெஸ்ட் பகுதியில் ஒரு 19 வயது இளைஞரும் அவரது 17 வயது பெண் தோழியும் மோட்டார் சைக்கிலில் சென்றபோது சாலையின் ஓரத்தில் உள்ள இரண்டு மரங்களில் மோதியதில் அவர்கள் பரிதாபமாக இறந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லையென்றும் அந்த இருவரும் சம்பவத்தன்று உணவு வாங்குவதற்காகச் சென்றதாகவும் கூறப்படுகின்றது. இறந்த அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், ரஃபி ஷெர்மன் அப்துல்லா டான் (19), மற்றொரு நபரின் வாடகை வாகனத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார் என்று தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்கள் : இந்தியாவின் Conde Nast Traveler விருது 2021 : “வெற்றிவாகை சூடியது Singapore Airlines” – தோற்கடித்தது எந்த நாட்டை தெரியுமா?

ஆனால் அந்த வாடகை வாகனம் இறந்த அந்த நபரிடம் எப்படி வந்தது என்று ஜனவரி 7, 2022 அன்று நடந்த மாநில பிரேத பரிசோதனையின் போது குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இளைஞனின் காதலியான நோர் அயுனி அப்துல்லா (17), ஜூரோங் வெஸ்ட் சென்ட்ரல் 1 வழியாக அந்த வாகனத்தின் பின்னல் சவாரி செய்து கொண்டிருந்தபோது, ​​பிற்பகல் சுமார் 3.40 மணியளவில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த இருவரும் பைக்கில் இருந்து தூக்கி விடப்பட்டனர் பல இடங்களில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது.

விபத்து நடந்த இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அயுனி என்ற அந்த 17 வயது காதலி இறந்தார். அதனை தொடர்ந்து மூன்று நாட்களுக்குப் பிறகு டான் இறந்துள்ளார். டான் மற்றும் அவரது மகள் ஆகிய இருவரும் ஜூரோங் போர்ட் சாலைக்கு அருகில் உள்ள ஜாலான் புரோவில் உள்ள ஒரு கிடங்கில் வேலை செய்து வருவதாக அயுனியின் தாய் கூறினார். சம்பவத்தன்று வேலையின் இடைவேளையின் போது உணவு வாங்குவதற்காக இருவரும் சென்றுள்ளனர் என்று நம்பப்படுகிறது. மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் அனுபவமின்மையே வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததற்கு காரணமான இருந்ததாக மாநில மரண விசாரணை அதிகாரி ஆடம் நகோடா கூறினார்.

இதையும் படியுங்கள் : Exclusive : “நிறுத்திவைக்கப்பட்டுள்ள VTL” : ஜனவரி 21 to 31 – விரைவாக விற்றுத்தீரும் சென்னை to சிங்கப்பூர் VTL டிக்கெட்கள்

டான் அதிவேகமாகச் சென்றது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதும், பைக் கட்டுப்பாட்டை இழந்ததற்குக் காரணமான ஆயில் பேட்ச் அல்லது சுற்றுச்சூழல் காரணிகள் எதுவும் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து நடந்தபோது அந்த மோட்டார் சைக்கில் என்ன வேகத்தில் சென்றது என்பதை போக்குவரத்து போலீசாரால் கணிக்க முடியவில்லை. விபத்து ஏற்படுவதற்கு முன் மோட்டார் சைக்கிளுக்கு முன்னால் அல்லது பக்கவாட்டில் எந்த வாகனங்களும் பயணிக்கவில்லை என்பதை கண்காணிப்பு கமெராக்கள் காட்டுகின்றன.

இறுதியில் இந்த விபத்திற்கு அந்த ஓட்டுநரின் அனுபவின்மையே காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts